Monday, February 16, 2026

இன்னுமா புரியவில்லை?

பொதுக்காலம் ஆறாம் வாரம், செவ்வாய்

யாக் 1:12-18. மாற் 8:14-15

இன்னுமா புரியவில்லை?

கூலி ரஜினியின் வசனம்: "எங்கோயோ பார்த்திருக்குரேன், எங்கோயோ பார்த்திருககிரேன்னு சொன்னியே, இன்னுமா என்னை தெரியலை?" 

நற்செய்தியில் இயேசு அடிக்கடி சீடர்களிடம், "இன்னுமா என்னை தெரியவில்லை? இத்தனை காலம் உங்களோடு இருந்திருக்கிறேன். இன்னுமா என்னை புரிந்து கொள்ளவில்லை? இத்தனை புதுமைகளை செய்திருக்கிறேன். இன்னுமா உங்கள் உள்ளம் மழுங்கிவிட்டது. கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா" என்று கடிந்து கொள்கிறார். அப்பம் பலுகும் புதுமையில் அவர்கள் தந்தையின் செயலைக் காணவில்லை, மாறாக தந்திர செயல் செய்யும் மந்திரவாதியைக் கண்டார்கள். புதுமையை கண்ட கண்கள் தந்தையின் ஆற்றலை காணவில்லை. இன்று நாம் எப்படி கண்டு கொள்ளப்படுகிறோம்.


Do the people, beneficiaries, staff recognise as holders of money, status and titles? Are they behind the Servants because we are sacred and godly persons? Do all our missions enjoy the bread and the Lord?

இயேசுவின் வல்ல செயல்களைக் காண்கிற மக்கள் கூட்டம், ‘இவர் யாவற்றையும் நன்றாக செய்கிறார்!’ என்று புகழ்கிறது. ஆனால், இயேசுவுக்கு அருகிலிருந்த அவருடைய சீடர்கள் அவர் யாரென அறிந்துகொள்ளவில்லை. மாற்கு நற்செய்தியாளர் இயேசுவின் சீடர்களின் இயலாமையையும் நொறுங்குநிலையையும் நன்றாகப் பதிவு செய்கிறார். இயேசுவின் சீடர்கள் அவரைப் புரிந்துகொள்ளாமல் இருப்பார்கள், அல்லது தவறாகப் புரிந்துகொள்வார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் படகில் இருக்கிறார்கள். ‘பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்!’ என்று கட்டளையிடுகிறார். இங்கே ‘புளிப்பு மாவு’ என்பதை அவர்களுடைய ‘வெளிவேடம், பகைமையுணர்வு’ ஆகியவற்றின் உருவகமாக மொழிகிறார் இயேசு. உருவகத்தின் பொருள் சீடர்களுக்குப் புரியவில்லை. புரியவில்லை என்பதை இயேசுவிடம் கூறவில்லை. மேலும், தங்களிடம் உள்ள அப்பத்தின் குறைபாட்டை எண்ணிப் பார்க்கிறார்கள். அப்பங்களைப் பலுகச் செய்கிறவர் தங்கள் நடுவே இருக்கிறார் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

‘இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?’ என்னும் இயேசுவின் இறுதிக் கேள்வி சீடர்களை நோக்கியதாகவும் வாசகர்களாகிய நம்மை நோக்கியதாகவும் உள்ளது.

நம் உள்ளத்தில் உள்ள கவலை, விரக்தி, சோர்வு போன்றவை நமக்கு நேரும் நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள இயலாமல் செய்கிறது. கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதைப் பல நேரங்களில் மறந்துவிடுகிறோம். பாவ நாட்டங்கள் பற்றிய விழிப்பு நிலை நாம் சோதனையில் விழாதாவாறு நம்மைக் காத்துக்கொள்கிறது.

No comments:

Post a Comment

Popular Posts