Showing posts with label Mother Mary. Show all posts
Showing posts with label Mother Mary. Show all posts

Monday, January 26, 2026

மரியா; இணை மீட்பாளர் அன்று! இறை ஆசியாளர்.

2 சாமு 6:12-15, 17-19. மாற் 3:31-35

திரு அவையில் திருத்தந்தை லியோ அவர்களின் அன்னை மரியாள் மீதான சமீபத்திய இறையியல் கோட்பாடு (சிந்தனை) உலகத்தையே மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாக்கியது. 

  1. Rejection of the title, coredemptrix: அன்னை மரியாள் இயேசு கிறிஸ்துவுக்கு இணையான ஒரு இணை மீட்பாளர் அன்று. மாறாக, மீட்புக்கு தேவையான அனைத்து அருளும் ஆசீர்வாதமும் அவரிடமிருந்தே வருகின்றது. Mediatrix of all graces. 
  2. எதற்காக இப்போது இந்த அறிவுரை? தற்போது அன்னை மரியாவை ஒரு பெண் தெய்வத்தை போன்று வணங்குவது, ஆராதிப்பது, வழிபடுவது இயல்பாகிவிட்டது. குறிப்பாக இன்றைய சோசியல் மீடியா வழியாக ஒரு பெண் தெய்வத்திற்கு இணையாக மிகைப்படுத்தப்பட்ட ஒரு வழிபாட்டை தருவது. 
  3. மீட்பு இயேசுவிடம் இருந்து மட்டுமே வருகிறது. Unique salvific role of Jesus, ஆனால், மீட்புக்கு தேவையான அனைத்து அருளும் ஆசீர்வாதமும் மரியாவிடமிருந்தே வருகின்றது. இயேசுவின்றி மீட்பு இல்லை, ஆனால், மரியாள் வழி மீட்பு எளிதாய் கிட்டும். 


‘உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்றுகொண்டு உம்மைத் தேடுகிறார்கள்’ என்று தம்மிடம் கூறியவருக்குப் பதில் பகர்கிற இயேசு, ‘இறைத்திருவுளம் நிறைவேற்றுபவர்கள்’ என்னும் வரையறையைத் தருகிறார்.

இவ்வாறாக, மரியா உடல் அளவில் மட்டுமல்ல, ஆன்மிக அளவில் தாயாக நிற்கிறார் என்று உணர்த்துவதோடு, அனைவரும் இந்த நிலைக்குள் வரமுடியும் என்று நமக்கு பெரிய எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.

  • இயேசுவின்றி மீட்பு இல்லை, ஆனால், மரியாள் வழி மீட்பு மிக மிக எளிதாய் கிட்டும். 


Popular Posts