செப் 2:3, 3:12-13. 1 கொரி 1:26-31. மத் 5:1-12
மலைப் பொழிவு: Who is Blessed? பேறுபெற்றோர்!
மகிழ்ச்சியாய் இருப்போர் பேறுபெற்றோர்களா? நிறைய பணம் படைத்தவர்கள், பெரிய வீடு வைத்திருப்பவர்கள், பெரிய காரில் பயணம் செய்பவர்கள், நிறைய நாடுகளுக்குச் சுற்றுலா செல்பவர்கள், ஆட்சியாளர்கள், யாவரும் மகிழ்ச்சியாக இருக்கிறவர்கள/ பேறுபெற்றவர்கள்?.
‘பேறு பெற்றவர்கள்’ என்றால் ‘மகிழ்ச்சிக்குரியவர்கள்’ மட்டுமல்ல ‘ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்’. கிரேக்கத்தில் மக்காரியோஸ் எனப்படுகிற வார்த்தை ஒரு திடீரென்று வருகிற ஒரு மகிழ்ச்சியை குறிப்பது அல்ல. நிலை. இறைவனுக்கு அருகில் இருக்கும் நிலை. வெகுதூர பயணம். கடினம், கடவுள் அருளும் சலுகை, கடவுள் அருளும் கொடை. பரிசு இன்று கிடைக்காது. இந்த உலகில் கிடைக்காது.
மலைப்பொழிவின் சூழலமைவு மூன்று சொற்களில் தரப்பட்டுள்ளது: (அ) இயேசு மலைமேல் ஏறுகின்றார், (ஆ) சீடர்கள் அவரிடம் வருகின்றனர், (ஆ) இயேசு அமர்ந்து கற்பிக்கின்றார்.
மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவை ‘புதிய மோசே’ என அறிமுகம் செய்கின்றார். முதல் ஏற்பாட்டு மோசே மலைக்கு ஏறிச் சென்றது போல, இரண்டாம் ஏற்பாட்டு மோசே என்னும் இயேசு மலைக்கு ஏறிச் செல்கின்றார். புதிய போதனை.
மலைப் பொழிவு கிறித்தவ வாழ்க்கையின் மாதிரி. கிறிஸ்துவ போதனையின் சுருக்கம் மலைப்பொழிவு. மகாத்மா காந்தி, “ஒரு மனிதன் உன்னதமான மனிதனாக மாறுவதற்கு, மலைப்பொழிவு மிக அவசியமானது. நான் ஒரு கிறிஸ்தவன் அல்ல நான் கிறிஸ்தவர்களையும் நான் அதை பற்றி நான் எதுவுமே பேசவில்லை ஆனால் கிறிஸ்துவனுடைய வாழ்வினுடைய தத்துவமாக இருக்கின்றன கூறுவார்.
இப்பகுதியில் எட்டு பேறுபெற்ற நிலைகளை இயேசு முன்மொழிகின்றார்.
பண்பு 1: ‘எளிய உள்ளத்தோரே பேறு பெற்றோர்: மத்தேயு நற்செய்தியில் ஏழ்மை என்பது பொருளாதார வறுமை அல்லது பின்தங்கிய நிலையை அல்ல, மாறாக, ஓர் ஆன்மாவின் உள்ளக் கிடக்கையைக் குறிக்கின்றது. குறிப்பாக, கடவுளைச் சார்ந்திருக்கின்ற உள்ளம்’ ஏழையரின் உள்ளம் என அழைக்கப்படுகின்றது. அதுக்குள்ளே செல்வர்களும் அடக்கப்படுவார்கள். “ஏழை எளியோரை உன் நடுவிலே நான் விட்டு வைப்பேன் அவர்கள் ஆண்டவரின் பேரிலே நம்பிக்கை கொள்ளுவார்கள்”. புற ஏழ்மை அன்று, அக ஏழ்மை, உள்ளத்திலே ஏழ்மையாக இருப்பவர்கள்.
முதல் வாசகம்: யோசியாவின் காலம் சமய புரட்சி ஏற்படுத்துகிறார், செப்பனியா சொல்லுகிறார், சில தீயவர் அழிந்து போவர். “ஆண்டவர் நம்பிக்கை கொள்ளுகிற பிள்ளைகள் ஏழை எளியவர்கள். அவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வேறு யாரையுமே நம்பவில்லை. ஆண்டவருக்கு அஞ்சி நடப்போருக்கு நல்வழி நடப்போருக்கு ஆண்டவர் ஆறுதல் தருவார். யார் இந்த எஞ்சியோர்? பொருளாதாரத்தில் அடித்தளத்தில் உள்ளோர். செல்வாக்கு இல்லாதோர், அதிகாரம்ற்றவர்கள் இவ்வாறு இவர்கள் இருக்கிற காரணத்தினால் சமுதாயத்தில் இகழ்ச்சிக்கு உரியவர்கள். இந்ுலையில் இவர்களுக்கு இறைவனை தவிர தஞ்சம் வேறு யாரும் இல்லை. ஆண்டவர் இவர்கள் பக்கம் இருக்கிறார்
ஏழைகள் அனாவிம் என்று அழைக்கப்பட்டார்கள். அது இவர்களிடம் செல்வம் இருக்கவில்லை. எவருமே மதிக்கவில்லை. பணம் படைத்தவர்களாலே ஒடுக்கப்பட்டார்கள். நசுக்கப்பட்ட நிலையிலே இவர்கள் இருந்தபோது இவர்கள் கடவுளை மட்டுமே நம்பினார்கள். கடவுளே உண்மையான செல்வம்.
பண்பு 2: ‘துயருறுதல்’: துயரம் என்பது நமக்கு வெளியே இருந்தும் வரலாம் – எடுத்துக்காட்டாக, இயற்கைச் சீற்றம், இழப்பு, இறப்பு. நம் தெரிவுகளாலும் வரலாம் – தவறான தெரிவுகள் துன்பம் தருகின்றன. துயரத்தில் இருப்பவர்கள் சபிக்கப்பட்டவர்கள் அல்லது கடவுளால் தண்டிக்கப்பட்டவர்கள் (காண். யோபு) என்று நினைக்கிற மக்கள் நடுவே, துயரம் அனுபவிப்பவர்கள் ஆறுதல் பெறுவார்கள் என்ற எதிர்நோக்கு இங்கே தரப்படுகிறது.
மரியன்னையை எலிசபெத், “மரியே நீர் பேருபெற்றவர்” என்று அவர் குறிப்பிடுகிறார். ஆண்டவர் சொன்னதை நம்பியதால் வரும் பேரு. கடவுளை அங்கீகரிப்பதால் வரும் பேரு. நான் உணருகிறேன் என்பதால் வரும் பேர் அல்ல. அது கடவுளுடைய ுடைய கொடையால் வரும் பேரு என்பதாகும்.
யோபு சொல்வார், “என் தாயின் கருப்பையில் பிறந்த மேனியனாய் நான் வந்தேன். மீண்டும் திரும்பி போகிற போது பிறந்த மேனியனாயே, நான் போகிறேன். கடவுள் தந்தார் கடவுள் எடுத்துக் கொண்டார். என்னுடைய மோதிரம் என்னுடைய சங்கிலி எதையுமே நான் கொண்டு போவதில்லை. வெறும் மனிதனாக வெறும் மனுஷியாக நான் இந்த உலகத்தை விட்டு போய்க்கொண்டிருக்கிறேன்.
இயேசு இதை வாழ்ந்து காட்டி இருக்கிறார் அதை இயேசுவை போல வாழ்ந்து காட்ட நாம் அழைக்கப்படுகிறோம்.லூக்கா 9: நறிகளுக்கு பதுங்கு குளிகளும் வானத்து பறவைகளுக்கு கூடுகளும் உண்டு ஆனால் மானுட மகனுக்கு தலை சாய்க்க கூட இடமில்லை என்று சொல்லுவார். பிலிப்பியர 3:8 அவர் செல்வராய் இருந்தும் எங்களுக்காக ஏழையானார். இந்த மானிட மகன் எவ்வளவு செல்வம் படைத்தவராக இருந்திருக்க வேண்டும் ஏழ்மையாக மாட்டு தொழுவத்திலே அவர் பிறக்கிறார் பெரிய மாட மாளிகையிலே கூட கோபுரத்திலே பிறக்க வேண்டியவர் பெரிய பஞ்சு மெத்தியிலே பிறக்க வேண்டியவர், அவரை கொண்டு வந்து துணிகளில் பொதிந்து தீவன தொட்டியிலே கிடத்தினார்களாம். ஏழ்மை எளிமையாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்குகிறார். அவ்வளவு அவர் தன்னை தியாகமாக கொடுக்கிறார். இறுதியிலே அவர் இறந்தபோது எந்த கல்லறையும் இருக்கவில்ல..
ஆகவே மனம் திரும்பி நாம் நற்செய்தியை நம்ப வேண்டும் என்று இன்றைய இந்த நற்செய்தி நமக்கு ஒரு சவாலை விடுக்கிறது ஏதோ மலைப்பொழிவு மலைப்பொழிவில் சொல்லப்பட்டிருக்கிற இந்த பண்புகளை எளிமை துயருறுதல் கனிவு நீதி நிலைநாட்டும் வேட்கை இரக்கம் தூய்மை அமைதி நீதியின் பொருட்டு துன்பப்படுதல் மிகவும் கடினமானது பின்பற்றுவதற்கு.