திருத்தந்தை Pope John Paul II அவர்கள், இரண்டாயிரமாம் ஆண்டில் போலந்து நாட்டைச் சேர்ந்த புனிதர் Saint Faustina Kowalska அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கினார். அதே நாளில், பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை “இறை இரக்கத்தின் ஞாயிறு” (Divine Mercy Sunday) என்று திருச்சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
புனிதர் Saint Faustina Kowalska அவர்களுக்கு 1930 ஆம் ஆண்டில் இயேசுவின் திருஇருதயக் காட்சி அருளப்பட்டது. அந்தக் காட்சியின் மூலம், உலகமெங்கும் இறை இரக்கத்தின் செய்தி பரவ வேண்டுமென்று ஆண்டவர் அவரை அழைத்தார்.
உயிர்த்த இயேசு ஆண்டவருடைய திரு இதயத்தில் இருந்து வெண்மை மற்றும் சிவப்பு நிற கதிர்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. வெள்ளைக்கதிர் திருமுழுக்கையும், சிவப்பு நற்கருணை திருவருட்சாதனத்தையும் குறிப்பிடுகிறது. இதனால் நாம் அறிந்து கொள்ள வேண்டியது: இயேசுவின் வேதனை நிறைந்த பாடுகளின் வழியாக நாமும் இந்த அகில உலகமும் மீட்கப்படுகின்றோம். இந்த நாளில் நாம் என்ன செய்ய வேண்டும்? ஒப்புரவு அருட்சதனம் பெற்றுக்கொண்டு, நற்கருணையை உண்டோமேயென்றால் நம்முடைய அனைத்து நிந்தைகளுக்கும் பரிகாரம் கிட்டும்.
பெற்றோர்கள் சிறுவயதிலேயே பிள்ளைகளுக்கு கடவுளை "தண்டிக்கும் கடவுளாக" அறிமுகப்படுத்துகிறார்கள். தவறு செய்தால் கடவுள் கண்ணை குத்திவிடுவார். தீமைகள் செய்பவர்கள் நரகத்தில் எண்ணெய் கொப்பரையில் போலப்படுவர் என்று ஆயுதம் ஏந்திய கடவுளாக நாம் அறிமுகப்படுத்துகின்றோம். ஆனால் திருத்தந்தி பிரான்சிஸ் "கடவுளின் முகம் இரக்கம்" என்று அழைக்கிறார்.
கடவுளின் இரக்கம் எப்படி வெளிப்படுகிறது? என்பதை இன்றைய வாசகங்கள் தெளிவுபடுத்துகின்றன. குறிப்பாக நற்செய்தி, கடவுள் அவரது இதயத்தை நம் விரலால் தொடக்கூடிய அளவுக்கு நெருங்கி வருகிறார் என்று சொல்கிறது. பலவீனம் பலவீனங்கள் கொண்ட இந்த மானுட உலகை, கடவுள் நேசிக்கிறார், ஏற்றுக்கொள்கிறார். அவர்களை தம்முடைய இதயத்தைத் தொட, இதயத்தில் இருந்து அருளை பெற்றுக்கொள்ள அழைக்கிறார்.
இயேசு, குறைபாடுகள், பலவீனங்கள், அச்சம், கலக்கம், பயம் கொண்ட சீடர்கள் மேல், ஊதி, தூய அனுப்புகிறார், அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்கிறார். சீடர்கள் ஒருவரை மற்றொருவர் மன்னிக்க அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கிறார். பாவ சங்கீர்த்தனம் என்னும் திருவருட்சாதனம் மீது நான் நம்பிக்கை வைக்க வேண்டும். திருத்தந்தையே பாவ அறிக்கை செய்கிறார். ஆகவே நாம் அனைவரும் பாவிகள். நம் உடல் மன நோய்கள் பாவக்கட்டுகள் அகல நாம் பாவ மன்னிப்பு அறிக்கை செய்ய வேண்டும். பிலிப்பைன்ஸ் நாட்டில் மரணப்படுக்கையில் இருப்பவர்களுக்காக நோயிற்பூசுதல் தந்த அனுபவம். ஆகவே ஆன்மீக தயாரிப்பு அவசியம்.
திரு அவையில் எவ்வளவுதான், கூட்டு அறிக்கை அல்லது கூட்டு ஜெபத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், தனிப்பட்ட விசுவாசம், இறை நம்பிக்கை மற்றும் தனிப்பட்ட ஜெபத்திற்கு எப்போதுமே வல்லமை உண்டு . இறைவன் அதை விரும்புகிறார். இயேசுவின் சீடரான தோமையார், "அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்"
தோமா இயேசுவின் இதயத்தை தொட்டு அவரை தனிப்பட்ட அனுபவத்தினால் அடைய எண்ணுகிறார். அனுபவம் பெறுகிறார்; "என் கடவுளே! என் ஆண்டவரே! என அறிக்கையிடுகிறார். இயேசுவின் ஐந்து காயங்களும் தழும்புகளும் எதை குறிக்கின்றன? தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுத்த இயேசுவின் உண்மையான அன்பை குறிக்கின்றது. (யோவான் 15:13)
உடல் காயம் மற்றும் மன காயங்களால் துன்புறும் மனிதர்களை மதிக்கிறோமா?