Showing posts with label holy family. Show all posts
Showing posts with label holy family. Show all posts

Sunday, December 28, 2025

Feast of Holy Family (Dec 28-30)

திருகுடும்ப ஞாயிறு
எசாயா 7:10-14. உரோமையர் 1:1-7. மத்தேயு 1:18-24


வலுவின்மையை சுமப்பதே குடும்பம்: ஒரு குடும்பத்தில் அண்ணன்-தம்பி என்று இரு சகோதரர்கள் இருந்தார்கள். தம்பி போலியோ நோயினால் நடக்க முடியாமல் ஆகிறான். ஆனால், அவனுக்கு கேரம் போர்ட் விளையாடுவது ரொம்பப் பிடிக்கும். ஊரின் வெளியில் உள்ள ஒரு அரங்கில் சிறுவர்களுக்காக கேரம் போர்ட் விளையாட்டு நடக்கும். அங்கே செல்ல விரும்பிய தன் தம்பியைத் தோளில் சுமந்துகொண்டு செல்கின்றான் அண்ணன். அரங்கம் நிரம்பி இருந்ததால் காத்திருக்க வேண்டிய கட்டாயம். அரங்கத்தின் ஓரத்தில் தம்பியை முதுகில் சுமந்தவாறு எந்த இடம் காலியாகும் என்று காத்திருக்கின்றான் அண்ணன். அண்ணன் தம்பியைத் தூக்கிக்கொண்டே நிற்பதைக் கவனிக்கின்ற பெரியவர் ஒருவர், ‘தம்பி! அந்தச் சுமையைக் கொஞ்சம் இறக்கிவைக்கலாமே! இப்படி தூக்கிக்கொண்டே நிற்கின்றாயே?’ எனக் கேட்கின்றார். ‘இவன் சுமையல்ல. என் தம்பி!என்கிறான் அண்ணன்.

குடும்பம் என்றால் ஒருவர் மற்றவரின் வலுவின்மையைச் சுமப்பதே.


திறமைகள், உடல்நலம் மற்றும் செல்வம் சேர்க்கும் திறன் பகிர்ந்து கொள்வது தான் குடும்பம்நம்முடைய வலுவின்மைகளைத் தாங்கிக்கொள்ள கடவுள் ஏற்படுத்திய ஒன்றுதான் குடும்பம்


குடும்பம் கடவுளின் மீட்புத் திட்டத்தின் அடிப்படை மனிதனை ஆணும் பெண்ணும் ஆக படைத்தார் அவர்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்ப வேண்டும் என்று விரும்பினார். ஆதாம் ஏவாள் தொட்டு பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் கடைசி புத்தகமான திருவழிப்பாட்டு வரை நாம் காண்கின்றோம்

பழைய ஏற்பாட்டில் கடவுள் தனி நபருடன் அல்ல, குடும்பத்துடன் உடன்படிக்கை செய்கிறார்: நோவா, ஆபிரகாம், இஸ்ரவேல் மக்கள்


கடவுளின் மீட்பு தனிநபருக்கல்லகுடும்பத்திற்கான மீட்பு

கடவுள் நோவாவை நீதிமானாகக் கண்டார் (தொ. 6:9).

கடவுளின் திட்டம் ஒருவரை மட்டும் காப்பாற்றுவது அல்ல; அவர் வழியாக அவருடைய குடும்பத்தை ஆசீர்வதித்தார்காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினார்.


சக்கேயுவிடம் இயேசு: இன்று இந்த வீட்டிற்கு மீட்பு வந்தது (லூக்கா 19:9)

சிறைக்காவலனிடம் பேதுரு, ஆண்டவர் இயேசுவை விசுவாசி; நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் (தி தூ 16:31)


மாதா டிவியில் கத்தோலிக்க வழக்கறிஞர் கூறுகிறார், "மற்ற குடும்பங்களை விட இன்று நம்முடைய கத்தோலிக்கு குடும்பங்களில் திருமணங்கள் முறிவு பெறுகின்றது,?

கணவன் மனைவி சிறு பிரச்சனைக்கு கூட உடனே நீதிமன்றத்தின் ஆடுவது, விவாகரத்து கேட்பது சகிப்புக் கொள்ளும் தன்மை இல்லாமல் அதிகமாகி விட்டது


We go for summer vacation trip to some places like Ooty, Kodaikanal. You need to go to the USA for a harmonious family relationship. You need not get a visa to go USA. U stands for Understanding, S stands for Sacrifice, and A stands for Affection. 


  1. Understanding: 

Trust: அனைத்து உறவுகளின் மையம் நம்பிக்கை டிரஸ்ட்

கடவுள் மையம்: நாசரேத் திரு குடும்பத்திலே திருகுடும்பத்தின் மையம் இயேசு. மரியாவாக இருக்கட்டும் யோசிப்புவாக இருக்கட்டும் அவர்கள் இருவருமே இயேசு கிறிஸ்து உடைய எதிர்காலத்தை பற்றி எண்ணியவாறு அவரைப்பற்றி சிந்தித்தவாறு அவரை எப்படி வளர்ப்பது என்று எப்படி பாதுகாப்பது என்று எண்ணி எவர்கள். நம்முடைய குடும்பங்களும் கடவுளை மையப்படுத்தியதாகவும் கடவுள் மையம் கொண்டவராக வேண்டும்


யோவான் 15 "என்னோடு இருப்பவன் மிகுந்த கனி தருவான்" என்னை விட்டு பிரிந்து ஒன்றும் எந்த குடும்பத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது."

லூக்கா 1:37 கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை


ஜெபம் இறைவார்த்தை, ஞாயிறு திருப்பலி வழிபாடு. புனிதர்கள் பற்றிய கதைகள் விவிலிய கதைகள் இவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும் . திருவருசாதனங்கள் வழி வாழ்தல், ஞாயிற்றுக்கிழமை எங்கள் குழந்தை ஓய்வு எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களே பார்க்கிறேன்

 கூடி ஜெபிக்கின்ற குடும்பம் குலையாது.

கடவுளோடு இணைந்து குடும்பம் கண்ணியமான குடும்பம்


  1. Sacrifice: 

திருமணத்தின் போது நீங்கள் கொடுத்த திருமண வாக்குறுதிகளை மறந்து விடாதீர்கள்

பீடத்த்திற்கு முன்பாக கண்களைப் பார்த்து, உறவினர்கள் முன்னிலையில் அவர்கள் சாட்சியாக, பொருளுணர்ந்து நீங்கள் கூறிய அந்த வார்த்தைகளை அடிக்கடி நினைத்துப் பாருங்கள். "நான் இன்பத்திலும் துன்பத்திலும்

உடல்நலத்தில், நோயிலும்,

என் வாழ்நாள் முழுவதும்

உன்னை அன்புடன் காப்பாற்றுவேன்."


தியாகத்திற்கு எடுத்துக்காட்டு புனித சூசையப்பர். அகதிகள் நாட்டிலே வாழ்ந்தபோது எப்படி அலைந்து திரிந்தார் குடும்பத்தை தூக்கிக்கொண்டு அவர்களை காப்பாற்ற வேண்டும் எதிரிகள்டம் கையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய உயிரையும் பயணம் செய்யும் இயல்பு அது தான் தியாகம்


மனைவி யார் என்பது கணவன் வேலையை விடும்போதுதான் தெரியும். கணவன் யார் என்று மனைவி நோய்வாய்ப்படும் போது தான் தெரியும், பிள்ளைகள் யாரென்று பெற்றோர்கள் இறக்கும் தருவாயில் இருக்கும்போது தான் தெரியும்


  1. Affection: 

1 கொரிந்தியர் 13. 

அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது;

அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்;


உங்களுடைய ஈகோ லெவலை அறிந்து கொள்ள வேண்டுமா?

உங்கள் குடும்பத்தினருடன் சண்டை போட்ட பின், எத்தனை நாட்கள் பேசாமல் இருக்கிறீர்களோ, அத்தனை நாட்களே உங்கள் ஈகோ லெவல்.

ஒரு நாள் பேசாமல் இருந்தால்ஈகோ குறைவு. பல நாட்கள் பேசாமல் இருந்தால்உறவு காயம்.

மன்னிப்பு பலவீனம் அல்ல, ஆன்மீக வலிமை

Open and Honest Communication

“Speak the truth in love.” (Eph 4:15)

Listening is as important as speaking.


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது அன்பு அறமாக திகழ வேண்டும் அன்பு அறமாக வழிந்தோட வேண்டும்


லூக்கா 2:48

அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமேஎன்றார். நான் மட்டுமல்ல ஆனால் உன் தந்தையும் நானும் தன்னை மெய்யப்படுத்தாமல் தன் தந்தை அவன் மீது அவனை அவரை பேணி காப்பாற்று குழந்தைகளை பேணி காப்பதிலே எவ்வளவு அன்பு கொடுத்திருக்கிறார் அந்த அன்பு எப்படி அறமாக வெளிப்படுகிறது என்பதை மரியாதை கொடுத்தார்


அன்பு எப்போது அரண் ஆகும் அது சமூக அக்கறை கொண்டபோது அரன

மரியாள் காண ஒரு திருமணத்தில் தண்ணீர் தீர்ந்தபோது திராட்சை ரசம் தீர்ந்த போது அந்த அன்பு அவர்கள் அவர் தம் குடும்பம் மேல் தன் மகன் மேல் கொண்ட அன்பு இப்போது சமூக அக்கறை கொண்டதாக மாறுகிறது காண்கின்றோம் விருந்தோம்பல் தம்பதியினர் மேல் ஒரு அக்கறை கொண்டதாக

திரு குடும்பம் இந்த உலகை ஒரு எதிரியாக பார்க்கவில்லைதிருகுடும்பத்தை உலகம் எதிர்த்தாலும் அது அன்பை போதிக்கின்றது, அன்பை பரப்புகிறது அன்பை வளர்க்கும் ஒரு சமூகமாக திரு குடும்பத்தில் உள்ளவர்களை வளர்த்தெடுக்கிறது அக்கறை கொண்டவர்களை குடும்பம் வளர்த்தெடுக்கிறது

Popular Posts