Thursday, February 12, 2026

EVEN THIS LOVE DISAPPEARS TONIGHT

​ஒரு படம் பார்த்தேன்;

கொரியப் படம்

‘Even if this Love

Disappears tonight' 

என்பது தலைப்பு


‘இன்றிரவே இந்தக் காதல்

மறைந்து படுமாயினும்’

என்று தமிழ்ப்படுத்தலாம்

சிறு கரு:

பள்ளிக் காதலர் இருவர்

வெண்பனியில் குளித்து

வெள்ளை மேகத்தில்

துவட்டிவைத்த வெண்மலர்கள்


விபத்தில்

அவளுக்கொரு நோய்;

"நேற்று நடந்தது

விடிந்தால் தெரியாது";

அவள் நினைவின் நீளம்

அன்று மட்டும்தான்


இப்படி ஒரு 'கரு' கிடைத்தால்

நம்மூரில் திரைக்கதை

என்ற பெயரில்

வந்தவன் போனவன் எல்லாம்

வைக்கோல் திணித்திருப்பான்


ஆனால், 

எந்தவொரு செயற்கை

சில்மிஷமும் இல்லாமல்

இலையில் நகரும்

நீர்த்துளிபோல

இயல்பாய் அசைகிறது கதை


'எல்லாருக்கும் பிடிக்கும்'

என்று சொல்லமுடியாது

இத்துனூண்டு

கவிதையை ரசிக்கும்

இதயங்களுக்கு இதுபிடிக்கும்


இதோ!

எனது அதிகாலை

காஃபியின் நுரைகளில்

நேற்றிரவு பார்த்த

நிலா முகங்கள்

நொறுங்கும் பிம்பங்களாய்


வைரமுத்து, முகநூல்


No comments:

Post a Comment

Popular Posts