பல ஆண்டுகள் முன்னரே, நம்மூர் சினிமாக்களில் பார்த்து பழகிப்போன ஒரு முக்கோண காதல் கதையை, பிரமாண்டமாக அடல்ட்ஸ் ஒன்லி கதையாக பல புரிதல்களுடன் நமக்கு கொடுத்திருக்கிறார் இயக்குனர் Adrial Lyne.
அன்பின் முன் அனைவரும் வளர்ந்த குழந்தைகள் தான் என்பதைத் தான் இந்தப் படமும் உரைத்து சொல்கிறது. ஆசையாக இருந்தாலும் சரி, விளையாட்டாக இருந்தாலும் சரி, பணமாக இருந்தாலும் சரி எத்தனை அள்ளிக் கொடுத்தாலும், இவற்றை வைத்து காதலுக்குள் எளிதாக நுழைய முடியாது என்பதே உண்மை.
Woody Harrelson and டெமி மூர் சிறு வயது முதலே காதலிக்க தொடங்கிய இளங்காதலர்கள். பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி கரம் பிடிக்கிறார்கள். அவன் ஒரு கட்டிடக்கலைஞன், அவளுக்கு கனவு இல்லத்தை கொடுக்க வேண்டும் என்று விரும்பினான். ஆனால் வறுமை அவர்களின் வாழ்க்கையை அலைகழித்தது. வறுமை அவர்களை துரத்தவே, ஒரு கட்டத்தில் சூதாட துவங்குகிறார்கள். ராபர்ட் என்னும் மல்டி மில்லியரான ஒரு பணக்காரனுக்கு டெமி மூரின் ஏழைக்கனவு, இயல்பான சிரிப்பு மிகவும் பிடித்து போகிறது. பணம் வைத்து விளையாட வேண்டிய வுடீ, மனைவியை பணயம் வைத்து விளையாட நேரிடுகிறது. வெற்றி பெறவே பணம் வந்ததைப் பற்றி யோசிக்காமல், தான் நேசித்த, தான் ரசித்த, தான் கொண்டாடிய மனைவியை எப்படி அனுப்பினேன், அவள் எப்படி அதை இயல்பாக கடக்கிறாள் என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல், தன்னுடைய கையாள தன்மையை உணர்ந்த நொடியில் கணவரின் அன்பை புரிந்து கொள்ள முடிகிறது.
பணக்காரன் ஆக நடித்திருக்கும் ராபர்ட் மிக நேர்த்தியான நடிப்பு உள்ளதை உள்ளபடியே சொல்லும் மல்டி மில்லியனர் ஆனால் உண்மை காதலுக்கு மட்டும் மரியாதை பண்ணுகிறார். ஏதோ ஒரு வேகத்தில், தன்னுடைய பண பலத்தை வைத்து, ஒரு காதலை பிரித்து விட்டோம் என்ற குற்ற உணர்வில், அமைதியாக அவளைப் பிரிய நினைக்கும் பணக்கார நாயகனுக்கும் சேர்த்து பரிதாபப்பட தோன்றுகிறது.
ஆனால், எத்தனை பெரிய சாம்ராஜ்ய மன்னராக இருந்தாலும், அவளது காதல் முழுவதும் கணவரின் மீதே இருக்கிறது. அவள் அவளாகவே இருக்க முடிந்த நபர் அவள் கணவரிடம் மட்டுமே.
சில நேரங்களில் சமூகம் கொடுக்கும் அழுத்தத்தில் தவறுகள் நேர்ந்தாலும், மறுபடியும் மனிதர்கள் சரணடையும் இடம், அவரவர் காதலில் மட்டுமே என்று முடிக்கிறார்கள்.
கணவன் மனைவி உறவில்தான் எத்தனை புரிதலின்மைகள் - எத்தனை சந்தேகங்கள். எல்லாவற்றையும் தாண்டி அவள் என்னுடையவள் என்று உணர்வதற்கு பிரிவு ஒன்றை அவசியமாகிறது. மூவரும் போட்டி போட்டு அநியாயத்திற்கு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள். படம் கண்டிப்பாக 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அல்ல. காரணம், பல்வேறு அடல்ஸ் காட்சிகள் உள்ளன. தவறுகளுக்கு மேல் தவறு செய்த மனிதர்களுக்குள்ளும் ஒரு உன்னதமான காதல் ஒளிந்து கொண்டிருக்கிறது.




