Tuesday, September 9, 2025

Sore; A wife from the future

வார வார எத்தனை படங்கள் வந்து கொண்டிருக்கிறது? எடுத்த கதையை எடுத்தால் என்ன பிரச்சனை? கதைக்கு இங்கே பஞ்சம் என்று சொல்பவர்கள் எல்லாம் கொரிய படங்களை பார்க்க வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்! ஒவ்வொரு சீனும் என்ன மேக்கிங் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு 2025ல ஒரு இந்தோனேசியன் ரொமான்டிக் சயின்ஸ் பிக்ஷன் டைம்லூப் படமாக வெளியான Sore; A wife from the future.

முதல் காட்சியில், படுக்கையில் இருந்து எழுந்தவன் அருகில் ஒரு அந்நிய பெண் அமர்ந்திருப்பதைக் கண்டு திடுக்கிடுகிறான். "யார் நீ". என் பெயர் sore, உன் வருங்கால பொண்டாட்டி, நான் எதிர்காலத்தில் இருந்து வருகிறேன். நம்மைப் போல் முதலில் நம்ப மறுப்பவன் பிறகு யாருக்குமே தெரியாத அவனது ஆழமான ரகசியங்கள்  அவள் சொல்வதின்  வழியாக நம்பத் தொடங்குகிறான். "இன்னும் மூன்று வருடங்கள் கழித்து நீ என்னை சந்திப்பாய் என் மீது காதல் கொள்வாய், நான் இப்போது உன் வாழ்வை செம்மைப்படுத்ததான் வந்திருக்கிறேன். இனி நீ நான் சொல்வதைக் கேட்டால் மட்டும் போதும் என்று,  குடி புகைப் பழக்கத்தை நிறுத்தச் சொல்கிறாள், அதிகாலையில் எழுந்து உடல்நலம் பேணச் சொல்கிறாள். சம்மதிக்கிறான். ஒரு நாள் அவளுக்குத் தெரியாமல் புகைப் பிடிக்கிறான். அப்போதுதான் உண்மை சொல்வாள். நீ இப்படிதான் என் சொல்பேச்சுக் கேட்காமல் உடலைக் கெடுத்து எட்டு வருடம் கழித்து இறந்துவிட்டாய். நான் தனியாகிவிட்டேன். சொல்லிய மறுகணம் அவள் மூர்ச்சையாகி இறந்துவிடுவாள்.


மீண்டும் கதை முதலில் இருந்து தொடர்கிறது. இவர்தான் தன்னுடைய மனைவி அப்படிங்கறதுக்கு கதாநாயகன் அடுத்து என்னதான் செய்தார் அதை கண்டுபிடிக்கிறதுக்கு. இப்படி பல விஷயங்களுக்கான விடைதான் இந்த படத்துடைய மொத்த கதையே.

இந்த படத்தின் இயக்குனர் யாண்டி லாரன்ஸ், ஒரு பெஸ்ட் இந்தோனேசிய இயக்குனர். இந்த படத்துல அட்டகாசமான எழுதப்பட்ட ஒரு கதாபாத்திரம் ஸொரெ என்ற ஹீரோயின் கதாபாத்திரம். அதை அந்த அளவுக்கு அழகாக உணர்ந்து உள்வாங்கி அட்டகாசமாக ஸ்கிரீன்ல புல் ஆஃப் பண்ணாங்க. அட்டகாசமான ஒரு பெர்பார்மன்ஸ். இது ஒரு டைம் லூப் படம். பொதுவாக தமிழில் இந்த மாதிரியான டைம் லூப் படங்கள் மிக மிக அரிது. அடுத்து என்ன நடக்க போதோ என்ற ஒரு பதபதைப்பு, பரபரப்பு  ஒவ்வொரு சீனிலும்! 


படத்துல ஹீரோவே பேசிக்காக ஒரு போட்டோகிராபர் என்பதால் சினிமட்டோகிராபி ஸ்டன்னிங்காக இருக்கும். படத்துடைய சினிமட்டோகிராபர் படத்துடைய மியூசிக் டைரக்டரும் அந்த அளவுக்கு மியூசிக் எங்க வருது உள்ள வருது வெளிய போகுதுனே தெரியாது. சீன்ல நமக்கு கொடுக்க வேண்டிய அந்த உணர்ச்சியை காட்சிகள் கடத்துது.  

இந்த படம் கிட்டத்தட்ட 13 கேட்டகிரில நாமினேட் ஆகி ஆல்ரெடி ஒன்பது விருதுகளை வென்ற ஒரு தரமான படம்தான் . Adult Content பொறுத்த அளவுக்கு எதுவுமே கிடையாது தாராளமாக ஃபேமிலியோட பார்க்கக்கூடிய படம்தான். 

 நம்முடைய திருஅவையில், மறைக்கல்வி மற்றும் பல குடும்பங்களில் இந்த படத்தை நிச்சயமாக ப்ரொபோஸ் செய்யலாம்.  உங்களுடைய Reviewக்கு பயன்படும்படியான சில சிந்தனைகள்:

  • No Marriage is perfect. "எந்தக் கல்யாணமும் குறைபாடற்றது அல்ல, உன்னிடம் சண்டையிட்டு கோபித்துக் கொண்ட பிறகு எனக்குத் தோன்றும். இறந்து இறந்து பத்தாயிரம் முறை பிறந்தாலும் நான் உன்னையே தான் தேடி வருவேன்" அவன் ஆச்சர்யப்பட்டு ஓ இவ்வளவு காதலிக்கிறாயா என்னை! என்பான்.
  • "அவளால் அவனை மாற்ற முடியவே முடியாது", அப்போதுதான் உணர்வாள், யாரையும் யாரால்  மாற்ற முடியாது, ஏனெனில் அது எப்போதும் உன்கையில்தான் இருக்கிறது, அதைச் செய்யவேண்டியது நீதான். 
  • அது ஒரு கட்டத்துக்கு மேல போகும்போது நமக்கே இவ்வளவுதாமா வாழ்க்கை அப்படிங்கிற அளவுக்கு  நம்மை அறியாமல் மனசு ரொம்ப நொந்து போய்விடுகிறோம். மன்னிப்பு, ஏற்றுக் கொள்தல் இவைதான் வாழ்க்கை என்று சொல்லாமல் சொல்கிறார் இயக்குனர். 


No comments:

Post a Comment

Popular Posts