பெந்தகோஸ்தே (தூய ஆவி) ஞாயிறு திப 2:1-11. 1 கொரி 12:3-7, 12-13. யோவா 20:19-23
இன்று நம் திருஅவையின் பிறந்த நாளாகிய தூய ஆவியாரின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறோம். “தூய ஆவியார்” என்ற இந்த பெருவிழா நம்முள் பல கேள்விகளை எழுப்புகிறது: யார் இந்த தூய ஆவியார்?
அன்னை மரியாள், புனித அந்தோணியார், புனித சூசையப்பர் போன்ற புனிதர்களைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், “தூய ஆவியார் யார்?” என்ற கேள்விக்கு பலருக்கும் தெளிவான புரிதல் இல்லை. ஊர்வலம், சப்பரம், நவனாள் திருப்பலிகள் கிடையாது. இதைத்தான் பவுல் எபேசு நகரில் எதிர்கொண்டார்: “தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே!” (காண். திப 19:1-10).
இன்று ‘பெந்தகோஸ்தெ’ என்றழைக்கப்படும் பிரிந்த சபையினர் தூய ஆவியானவரை மட்டுமே இறைவனாகக் கருதுகின்றனர். பொட்டு, பூ அணியக் கூடாது, வெள்ளைஆடைதான் அணிய வேண்டும் என்று சொல்லி, ‘நீங்கள் அக்கினி அபிஷேகம் பெற்றுவிட்டீர்களா?’ என்று கேட்கிறார்கள். மற்றும் ‘அருங்கொடையாளர்கள்’ (‘கரிஸ்மேடிக்ஸ்’) என்று தங்களையே, நம் திருஅவை மரபிற்குள் இருந்துகொண்டே ஒரு மாற்று வழிபாட்டு முறையையும் முன்வைக்கின்றனர். ஆனால், திருச்சபை நமக்குக் கற்றுத்தருவது என்னவெனில், தூய ஆவியார் மூவொரு இறைவனின் மூன்றாம் நபர்; வெறும் சக்தி அல்ல, உயிருள்ள இறைநபர்.
விவிலியத்தில் ‘தூய ஆவி’ என்ற பெயர் நான்கு நிலைகளில் கையாளப்படுகின்றது:
(1) ‘ஆண்டவரின் ஆவி.’ எபிரேயத்தில் ‘ருவா’. இந்த ‘ஆவி’ தான் படைப்பின் தொடக்கத்தில் நீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தவர் (தொநூ 1:2). ஆதாமின் உடலுக்குள் ஊதப்பட்டவர். அரசர்கள் மற்றும் இறைவாக்கினர்கள்மேல் இறங்கி வந்தவர். இயேசுவின் திருமுழுக்கின்மேல் அவர்மேல் இறங்கி வந்தவரும், அவரை பாலைநிலத்திற்கு அழைத்துச் சென்றவரும், ‘ஆண்டவரின் ஆவி என்மேல் உளது’ என்று இயேசு தொழுகைக்கூடத்தில் சொன்னவரும் இவர்தான்.
(2) ‘இயேசுவின் ஆவி.’ தன் உயிர்ப்புக்குப் பின் தன் சீடர்கள் மேல் ஊதுகின்ற இயேசு, ‘தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்’ (யோவா 20:22) என்கிறார்.
1. தூயஆவியார் ஒரு நபர், அவர், அவர் உங்களுக்கு ஆறுதல் தருவார். ‘மூவொரு இறைவனில் ஓர் ஆள்.’ தன் இறுதி இராவுணவில் சீடர்களின் பாதங்களைக் கழுவிவிட்டு அவர்களோடு தொடர்ந்து உரையாடும் இயேசு (காண். யோவா 13 -1 6) அவர்களிடம், ‘தூய ஆவியானவர்’ என்னும் துணையாளரைத் தான் அனுப்பவதாகவும், அவர் அவர்களுக்கு திடமளிப்பார், கலங்க விட மாட்டார்.
2. ‘அனைவருக்கும் தூய ஆவி: முதல் ஏற்பாட்டில் தூய ஆவி சிலருக்கே வழங்கப்பட்டார்: அரசர்கள், இறைவாக்கினர்கள் போன்றோருக்கு. ஆனால் பெந்தகோஸ்தே நாளில், திருத்தூதர்களும் அன்னை மரியாளும் தூய ஆவியைப் பெற்றுக்கொள்கிறார்கள். பின்னர் எல்லா மக்கள்மேலும் ஆவியார் அருளப்படுகிறார். இனி ஆவியார் ஒரு குறிப்பிட்டவருக்கே அல்ல; கடவுளைத் தேடும் அனைவருக்கும்.
3. ‘அவர் ஒரு மனிதர் - துணையாளர்: ‘மூவொரு இறைவனின் மூன்றாம் நபராக இருக்கும் இவர் வெறும் ஆற்றல் அல்லது சக்தி மட்டுமல்ல. மாறாக, மூன்றாவதாக இருக்கின்ற ஒரு மனிதர். இவர் வழியாகவே நாம் கடவுளை, ‘அப்பா, தந்தையே’ என அழைக்கிறோம். தூய ஆவியார் சாதாரண உதவிகள் மட்டுமல்ல! பாவச்சோதனைகள் வரும்போது துணையாக இருக்கிறார். “நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள்”. (உரோ 8:13). இச்சைகள் போதைகள், சோதனைகள், பாவ உணர்வுகள், தற்கொலை எண்ணங்கள் வரும்போது, - ஜிம், மூச்சுபயிற்சி, கடவுள் சக்தியில் அடைக்கலம் தரும்போது, தைரியம், கலக்கம் இல்லை - தங்களுக்குள்ளே பூட்டிக் கிடந்தவர்களை தங்களுக்கு வெளியே அனுப்புகிறார் ஆவியார். நமக்குள்ளே எழும் எண்ணங்கள் பல நேரங்களில் நம்மை சிறைப்படுத்துகின்றன. நமக்கு வெளியே நோக்கி தொடர்ந்து நகர நம்மை அழைக்கிறார் ஆவியார்.
4. கற்றுத் தருபவர் தூயஆவியார்: தூய ஆவியாரின் கொடைகள் ஞானம், அறிவு, புத்தி. எந்த யுனிவர்சிட்டியும் சென்று கல்வி கற்றிராத பேதுரு, தூய ஆவியின் வல்லமையால் முதல் பிரசங்கத்தில் மூவாயிரம் பேரையும், இரண்டாவது பிரசங்கத்தில் ஐயாயிரம் பேரையும் மனமாற்றத்திற்கு அழைத்தார். இதுவே தூய ஆவியாரின் செயல். இசை, மொழிகள், குணமாக்கும் வரங்கள், ஊழியத்திற்கான திறமைகள்—இவை அனைத்தும் தூய ஆவியாரின் அருள்கொடைகள். (இசைக்கருவிகள் மீட்டுவதற்கு, புதிய மொழிகள் கற்றுக்கொள்வதற்கு, குணமாக்கும் வல்லமை பெறுவதற்கு) எத்தனை ஊழியத்திற்கான வரங்கள், யோவான் 16:8-ல் இயேசு கூறுகிறார்: “தூய ஆவியார் வந்து பாவம், நீதி, தீர்ப்பு பற்றிய உலகத்தின் தவறான கருத்துகளை எடுத்துக்காட்டுவார்.” இன்று “பாவம் என்று ஒன்றே இல்லை” என்று சிலர் கூறுகின்றனர். மற்றவர்களின் தவறுகளை மட்டும் பார்க்கிறோம்; நம்மை ஆராய்வதில்லை. ஆனால் எது பாவம், எது நன்மை என்பதை உணர்த்துபவர் தூய ஆவியார்.
5. தூய ஆவி உண்மையை நோக்கி வழினடத்துவார்: உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். யோ 16:13. உலகம் பொய் நிறைந்த உலகம். உண்மையை நோக்கி வழினடத்துவார். விண்ணகம் பற்றிய, நரகம் பற்றிய உண்மைகள்.
தூய ஆவியைப் பெற்றவர்கள் எப்படி வாழ வேண்டும்? ஆவியின் பிள்ளைகளாக வாழ வேண்டும்.
மனமாற்றம் அடைய வேண்டும். பேதுருவின் முதல் பிரசங்கத்திற்குப் பிறகு 3000 பேர் மனம் மாறினர். உண்மையான மனமாற்றம் இல்லாமல் ஆவிக்குரிய வாழ்வு இல்லை. வெளிவேடம் அல்ல, உள்ளார்ந்த தூய்மை தேவை. பல ஆண்டுகளாக நம்மை கட்டிப்போட்டிருக்கும் பாவங்கள், பழக்கங்கள், வெறுப்புகள் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற வேண்டும். சிலர் தன்னைப்பற்றியேபேசி கொண்டு இருப்பர். எதுவும் சரியில்லை. குறைகள், திருவிழா, யாருக்கும் வழினடத்த தெரியவில்லை. ஆவியின் வெளிப்பாடு உள்ள சகோதரர்கள் அவர்களுக்கு அனைத்து உண்மைகளும் தெரியும், நாம் பாவத்துக்குள்ளே இருக்கும்போது, திருச்சபை - பாவ சங்கீர்த்தனம். அசுத்த வாழ்க்கை மறையும்போது ஆவியானவர் தூய்மை அடையும். பல ஆண்டுகள் பாவம் கட்டுக்களாக இருக்கும்.
இறுதியாக, தூய பவுல் குறிப்பிடும் “உடலின் செயல்கள்” — “பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பகைமை, பொறாமை, சீற்றம், பிரிவினை, குடிவெறி...” ஆகியவற்றை விட்டு, “அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம்” (காண். கலா 5:22-23) ஆகிய ஆவியின் கனிகளை நோக்கி நாம் நகர வேண்டும்.
நற்செய்தி வாசகத்தில் உயிர்த்த ஆண்டவர் தம் சீடர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்!” என்கிறார். படைப்பின் தொடக்கத்தில் கடவுள் மனிதனுக்குள் உயிர் ஊதியது போல, இங்கே இயேசு தம் சீடர்களைப் புதிய படைப்பாக மாற்றுகிறார்.
மூவொரு இறைவனில் நாம் அடிக்கடி மறந்துவிடும் நபர் தூய ஆவியார். இந்த ஆவியாரின் துணையை வேண்டி நாம் மன்றாடுவோம். ஏனெனில், இவர்மூலமாகவே நாம் கடவுளோடு உரையாடுகிறோம்; இவர்மூலமாகவே கடவுளின் உண்மையையும் அன்பையும் அனுபவிக்கிறோம்.

No comments:
Post a Comment