Thursday, December 18, 2025

HOLINESS IS WHOLENESS - 183rd BIRTHDAY OF ST. L. GUANELLA

“Holiness Is Wholeness” 

யார் இந்த புனித லூயிஸ் குவனெல்லா?
எதற்காக அவரை நாம் “புனிதர்” என்று அழைக்கிறோம்?

புனித குவனெல்லா… 

  • புனித அந்தோனியார் போன்று
அற்புதங்களால் உலகை வியப்பில் ஆழ்த்தியவர் அல்ல.
  • புனித தாமஸ் அக்குவினாஸ் போன்று
ஆழ்ந்த இறையியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளால்
திருச்சபையை வளப்படுத்தியவரும் அல்ல.
  • புனித பியோ போன்று
இயேசுவின் திருக்காயங்களைத் தமது உடலில் சுமந்தவரும் அல்ல.

ஆனால்…

புனித லூயிஸ் குவனெல்லா,
“புனிதம் என்பது ஒரு முழுமை.” என்று கூறி வாழ்ந்தவர். மனிதத்தை முழுமையாக வாழ்ந்தாலே புனிதராக முடியும் என்று நிரூபித்தவர்.


புனித குவனெல்லா நமக்குச் சொல்வது:
புனிதம் என்பது உடல் நலம், மன நலம், ஆன்ம நலம்
இவை மூன்றும் இணைந்ததுதான் வாழ்வின் அழகு.

அற்புதங்கள்-புதுமைகள் எதுவும் நிகழ்த்தாமல்,
தன் அன்றாட வாழ்வையே அற்புதமாக மாற்றியவர்
புனித லூயிஸ் குவனெல்லா.






1. உடல்நலம்: Saint Guanella was, first of all, fully human. உடலைத் துறந்து அல்ல, உடலை அன்பின் கருவியாக மாற்றுவது புனிதம். பிரச்சிஸியோ என்ற கடினமான மலைப்பகுதிகளில் பிறந்தவர். He was born among the mountains; he had the gift of hard work, sobriety, and perseverance. He was from the river Rabbiosa, and so he possessed remarkable physical stamina. He used to work for the poor, the sick, and the abandoned. His holiness was not detached from the body; rather, his body became an instrument of love. He cared for concrete needs—bread, shelter, work—because he knew that grace does not float above human misery but enters it. He often says, “Give bread and the Lord.” The first need for man is to give bread for his bodily health. Before giving the spiritual A holy life, therefore, does not neglect physical well-being but uses strength and health in the service of others.

2. மன நலம்: சிந்திக்கும் மற்றும் கற்றுக் கொடுக்கும் திறன்: Secondly, Saint Luigi Guanella was a man of clear intelligence and was recognized as a good and passionate educator. He lived in a time of social upheaval, poverty, and anticlericalism, yet he was neither bitter nor rigid. He reflected, discerned, planned, educated, and adapted. Guanella, after learnt from Don Bosco, became capable of shaping minds and restoring dignity, particularly among the mentally disabled and marginalized. His mental balance was a result of realism and hope—he saw human weakness clearly, yet always believed in the possibility of renewal. He said often, “Holiness is not escapism, but a healthy, compassionate way of thinking, rooted in truth and mercy.

3. ஆன்ம நலன்: ஆன்மாவை உலகிலிருந்து பிரித்து அல்ல, உலகின் துயரங்களில் கடவுளைக் காண்பதே புனிதம். Above all, Saint Guanella was a Man of God. His spiritual life was the center that held everything together. His assiduous prayer, deep love for the Eucharist, devotion to Scripture, and total trust in Divine Providence gave unity to his actions. “It is God who does,” he repeated often. This spiritual abandonment did not make him passive; instead, it made him fearless. Because his soul rested in God, his body could labor tirelessly, and his mind could remain serene even amid misunderstanding and failure.

Dear friends, Saint Luigi Guanella shows us that holiness is a healthy harmony between the full and right use of your body, mind, and Soul. He had a body spent generously in service, a mind formed by wisdom and compassion, and a soul anchored in constant communion with God.

In a fragmented world, where people are exhausted in body, anxious in mind, and empty in spirit, Saint Guanella’s life is a prophetic reminder: to love God and neighbor fully, we must be whole persons. May his example inspire our families, our ministries, and our communities to seek not just success or comfort, but the joyful balance that leads to true holiness.

Amen.

Saturday, December 13, 2025

மகிழ்ச்சி ஞாயிறு

திருவருகைக்காலம் 3ஆம் வாரம்

மகிழ்ச்சி மெசியாவின் செயல்

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றை ‘கௌதேத்தே சண்டே’ (‘மகிழ்ச்சி ஞாயிறு’) என அழைக்கின்றோம். இன்றைய திருப்பலியின் வருகைப் பல்லவியும், முதல் வாசகமும் ‘அகமகிழ்தல்’ என்னும் சொல்லுடன் தொடங்குகின்றன.

சிரிப்பு பற்றிய ஒரு குட்டி ஜோக்கிலிருந்து துவங்குகிறேன்: 

  • முகத்தில் சிரிப்பு இல்லாதவனைப் பார்த்து ஒருவர் கேட்டார்:
“என்னப்பா, சிரிக்கவே இல்லையே?”
  • அவன் சொன்னான்:
“சார்… சிரிப்பு ஃப்ரீ தான்,
ஆனா காரணம் இல்லாம சிரிச்சா
ஆளுங்க சந்தேகப்படுறாங்க!”

உங்களுக்கு சிரிப்பு தருவது எது? நீங்கள் எதனால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறீர்கள்?

  •  பிரியாணி சாப்பிடுவது
  •  ஃபுட்பால் விளையாடுவது
  • வகுப்புகளுக்கு விடுமுறை விடுவது

மகிழ்ச்சி என்பது ஒரு ‘ரெலடிவ்’ (தனிநபர்சார் உணர்வு) எமோஷன். அதாவது, அது தனிநபர் சார்ந்தது. எல்லாருக்கும் பொதுவான மகிழ்ச்சி என்று ஒன்று கிடையாது. 

நெக்ஸ்ட் கொஸ்டின்: மகிழ்ச்சி உள்ளிருந்து வருகிறதா? அல்லது வெளியிலிருந்து வருகிறதா? ‘உள்ளிருந்து வருகிறது’ என்றால், சில நேரங்களில் நம் மனம் எந்தக் காரணமும் இல்லாமல் சோர்ந்திருக்கக் காரணம் என்ன?  மனதுக்கு உள்ளே இருந்து வருவது உன்னத மகிழ்ச்சியாக (Joy) மாறாக சற்று நேரமே நீடிப்பது சிற்றின்பம் (happiness) எனப்படும். 

அலெக்ஸாண்டர் தெ கிரேட் உலகையே தன் கைக்குள் அடக்கிவிடத் துணிந்தது இன்பதிற்காகவே! புத்தர் அரண்மனையை விட்டு வெளியேறி போதி மரத்தடியில் அமர்ந்தது நிறை மகிழ்ச்சிக்காகவே! 

மெசியாவின் செயல்களைக் கேள்வியுறுவதும், ஏற்பதும், செய்வதும் அக மகிழ்ச்சி என்று முழுமகிழ்ச்சிக்கான புதிய வாயில்களைத் திறக்கின்றன இன்றைய வாசகங்கள்.

இன்றைய முதல் வாசகத்தின் (காண். எசா 35:1-6,10) பின்புலம் மிகவும் சோகமானது. கிமு 7-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இஸ்ரயேலும் எருசலேமும் அசீரியாவால் மிகுந்த அச்சுறுத்தலுக்கு ஆளாகின. மக்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள். கோயில் தீட்டாக்கப்பட்டது. ‘எல்லாம் முடிந்தது’ என்று நினைத்த மக்களுக்கு, ‘முடியவில்லை, விடிகிறது’ என்று இறைவாக்குரைக்கின்றார் எசாயா. முதலில், ஒட்டுமொத்த படைப்பும் புத்துணர்ச்சி பெறுகிறது – ‘பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழ்கிறது,’ ‘பொட்டல்நிலம் அக்களிக்கிறது,’ ‘லீலிபோல் பூத்துக்குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படைகிறது’ – படைத்தவரின் அரவணைப்பை படைப்பு பெற்றுக்கொள்கிறது. 

பாடம் 1: Do not worry about the past, Be firm உள்ளத்தில் உறுதி

இஸ்ராயேல் மக்கள் கடந்த காலத்தின் அடிமைத் தனத்தில் நொந்து போய், திளைந்து போய் இருந்தவர்களிடம், "தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள். தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்என அழைப்பு விடுக்கின்றார் எசாயாDo not worry about the past, do not waste your time by regretting the past life. மாறாக, Increase Gratitude. கிடைப்பதை வைத்து 

மகிழுங்கள் அடிக்கடி உங்களை மற்றவர்களோடு கம்பேர் செய்யாதீர்கள். நீங்கள் கடவுளுடைய கொடை உறுதியாக கூறுங்கள். சின்ன சின்ன செயல்களுக்கு கூட நன்றி கடவுளுக்கு நன்றி கூறுங்கள் குறிப்பாக உணவுக்கு கிடைத்தகுடும்பத்திற்கு கிடைத்த நபர்களுக்கு மனிதர்களுக்கு நன்றி கூறி ஜெபியுங்கள்



இன்றைய இரண்டாம் வாசகம் (காண். யாக் 5:7-10) யாக்கோபின் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. யாக்கோபு இத்திருமடலை எழுதுகின்ற நேரத்தில் உலகின் முடிவு மற்றும் இரண்டாம் வருகையை மையமாகக் கொண்டு ‘நிறைவுகாலம்’ (‘பரூசியா’) பற்றிய எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. மக்கள் பொறுமையின்றி இருந்தனர். அதாவது, ஒரு வகையான அவசரம் அனைவரையும் பற்றிக்கொண்டது. எல்லாம் அழியப் போகிறது என்னும் அச்சம் அவர்களுக்கு இருந்தது.  இவர்களுக்கு அறிவுறுத்துகின்ற யாக்கோபு, ‘பயிரிடுபவரைப் போல பொறுமையாகவும்,’ ‘ஒருவர் மற்றவரிடம் முறையீடு இன்றியும்’ இருக்குமாறு அறிவுறுத்துகின்றார்.



(ஆ) பாடம் 2 - பொறுமை:  நம் வாழ்வில் நம்மை அறியாமல் ஏதோ ஓர் அவசரம் நம்மைப் பற்றிக்கொள்ள அனுமதிக்கிறோம். எதையாவது செய்துகொண்டே வேண்டும் என்ற நிர்பந்தமும் நம்மை அழுத்துகிறது. இந்த இடத்தில் யாக்கோபு தருகின்ற உருவகத்தின் பொருளை உணர்ந்துகொள்வோம். பயிரிடுபவர் கொண்டிருக்கும் பொறுமையை நாம் கொண்டிருக்க வேண்டும். நிலத்தில் விதைகளை இட்ட விவசாயி விதை தானாக வளரும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டும். Be calm, relate with every one. Experience the present life. அவசரம் குறைத்து பொறுமை ஏற்றால்தான் நம் வாழ்வில் மெசியாவின் செயல் நடந்தேறுதலைக் காண முடியும். நாமும் அச்செயலைச் செய்ய முடியும்.


நற்செய்தி வாசகம்: இயேசுவின் சமகாலத்தில் மெசியா பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மெசியா என்றால் அரசராக அல்லது அருள்பணியாளராக வந்து தங்களை எதிரிகளின் கைகளிலிருந்து விடுவிப்பார் என்று நம்பினர் மக்கள். இந்த நம்பிக்கை யோவானுக்கும் இருந்தது. ஆனால், இயேசுவின் மெசியா புரிதல் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. இயேசுவைப் பொருத்தவரையில் மெசியாவின் செயல்கள் என்பவை தனிநபர் வாழ்வில் நடந்தேறுபவை: ‘பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர், கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர், தொழுநோயாளர் நலமடைகின்றனர், காதுகேளாதோர் கேட்கின்றனர், இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது’ என்று மெசியாவின் வருகையின் மாற்று அடையாளங்களைச் சொல்லி அனுப்புகின்றார்.


பாடம் 3: நன்மை தரும் செயல்கள் செய்து அனுபவிக்க வேண்டும்: யோவானின் உடல் சிறைப்பட்டிருந்தாலும் அவருடைய உள்ளம் என்னவோ உறுதியோடு இருக்கிறது. தன்னைச் சுற்றி நடக்கும் நற்செயல்கள்: பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. 


நண்பர்களே! நன்மை தரும் செயல்கள் அதிகம் செய்ய வேண்டும். Do at least one act of kindness daily. A kind word, a smile, and help at home for your family. மொபைல் உபயோகிப்பதாதை தவிர்ப்பீர். Put the phone down during meals. We lose a lot of time because of mobile phones. Look at each other. Listen. Happiness begins with attention. Even just one minute of prayer or silence each day can bring calm, unity, and inner strength to the family.


மூன்று வாசகங்களிலும் துன்பம் பின்புலமாக நிற்கிறது: (அ) முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் அசீரியாவின் அடிமைத்தனத்தில் இருக்கிறார்கள். (ஆ) இரண்டாம் வாசகத்தில், எதிர்காலம் பற்றிய அச்சம் யாக்கோபின் திருஅவைக்குத் துன்பம் தருகிறது. (இ) நற்செய்தி வாசகத்தில், அடிமைத்தனம், அச்சம், சிறையடைப்பு என்றும் மூன்று துன்ப நிலையில் இருந்தவர்களும் மெசியாவின் செயல்களைக் கேள்வியுறுகிறார்கள், காண்கிறார்கள், அனுபவிக்கிறார்கள்.


கடந்த காலத்தின் அடிமைத் தனத்தின் துவளாமல், இரண்டாம் வாசகம் காட்டும் பொறுமையோடும், நற்ச்செய்தி காட்டும் பிறரன்புப் பணிகளின் வழியாகவே மெசியாவின் செயல்கள் கண்டு கொள்ளப்ப்டும்.  மெசியாவின் செயல்கள் இஸ்ரயேல் மக்களுக்கும் இயேசுவின் சமகாலத்தவருக்கும் மட்டும் உரியவை அல்ல. அவை இன்றும் நம்மில் நம் வழியாக நடந்தேறுகின்றன. அவரின் செயல்கள் நம் வாழ்வில் சிற்றின்பகமன்று, மாறாக, நிறைமகிழ்ச்சி தருகின்றன.


Thursday, December 11, 2025

Our Lady of Guavadalupe - Feast

மறையுரை

குவாடலூபே அன்னை விழா - திருவருகைக்காலம் இரண்டாம் வாரம் – வெள்ளி

எசாயா 48:17-19. மத்தேயு 11:16-19

டிசம்பர் 12 ஆம் நாள் உலகம் முழுவதும் குவாடலூபே அன்னை திருவிழாவை கொண்டாடுகிரோம், அன்னை மரியா இல்ல பல இடங்களில் காட்சி கொடுத்திருக்கிறார். மெக்சிகோ நாட்டு குவாடலூபே அன்னயின சிறப்பம்சம் என்ன? 

13ம் நூற்றாண்டில் மிக்சிகோ நாட்டின் மலைப்பகுதியில் வாழ்ந்த Juan Diego என்ற 13 வயது மலைவாழ் சிறுவனுக்கு சிறுவனுக்கு மரியா அற்புதமாக தோன்றினார். 

ஆயர் அவர்களும், மற்றவர்களும் நம்பிக்கைக்கான ஒரு அடையாளம் கேட்டபோது அடுத்த முறை மரியாள் காட்சி தந்த போது அவருடைய பாரம்பரிய உடையான (Tilma) மேலாடையில் ரோஜாக்களை சேகரித்து ஆயரின் அறையில் திறந்த போது அன்னையின் அற்புதத் திருவுருவம் அந்த ஆடையில் அச்சிடப்பட்டிருந்தது.

இதில் என்ன சிறப்பு என்றால் என்னவென்றால் குவாடலூபே  அன்னையின் உருவமும், விவிலியத்தின் இறுதி நூலான திருவழிப்பாட்டு நூல் குறியீடுகளோடு பொருத்தமாக இருந்தது. திரு அவையின் இருபெரும் தூண்கள் அன்னையும் விவிலியமும். 

இது ஒரு இயற்கைக்கு மாற்றான அற்புதம் என்று அனைவரும் உணர்ந்தனர். இதனால் ஆயர் அங்கு ஆலயம் அமைத்தார். இன்று அது உலகில் கோடிக்கணக்கான யாத்திரிகர்கள் வரும் குவாடலூபே தாயின் திருத்தலம், மெக்ஸிகோ நகரத்தில் உள்ள Basilica of Our Lady of Guadalupe ஆகும்.


குவாடலூபே அன்னைக்கு அற்புத செபம்

அன்பும் அருளும் நிறைந்த குவாடலூபே அன்னை,
எங்கள் தாயாகி, எங்கள் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்த்தும் கருணைச் செல்வியே,
உமது பரிசுத்த திருவுருவத்தில் எங்களை உன்னதமான அன்பால் தழுவியருளும்.

உமது திருவிரல்களில் மலர்ந்த ரோஜாக்கள் போல,
எங்கள் வாழ்விலும் அருள் மலர்ச்சி உண்டாகச் செய்யும்.


எங்கள் கவலைகளை அமைதியாக மாற்றி,
எங்கள் காயங்களை ஆறுதலின் மணத்தால் ஆற்றுதலாக்கும் தாயே,
எங்களை உமது திருத்தோழமையில் பாதுகாத்தருளும்.

அன்னை, நோயாளிகளுக்கு ஆற்றல்,
துயரப்படுவோருக்கு நிம்மதி,
அதிர்ச்சியில் இருப்போருக்கு துணை,
இருளில் நடப்போருக்கு வெளிச்சம் நீரே.
எங்கள் குடும்பத்தைக் காக்கவும்,
எங்கள் மனங்களை வலிமைப்படுத்தவும்,
எங்கள் பாதைகளை உண்மையின் வழியிலே நடத்தவும்.

குவாடலூபே அன்னை,
உமது அன்பு போர்வையில் எங்களைச் சூழவைத்து,
தெய்வகுமாரனின் அருளைப் பரிந்துரைத்து,
எங்கள் வேண்டுகோள்களை ஏற்று நிறைவேற்றும் தாயே,
எங்களுக்காக விண்ணப்பம் செய்.

ஆமென்.

Sunday, December 7, 2025

Immaculate Conception

புனித கன்னி மரியாவின் அமல உற்பவம், பெருவிழா

தொடக்கநூல் 3:9-15, 20. எபேசியர் 1:3-6, 11-12. லூக்கா 1:26-38

கறை நல்லது!

‘அன்னை கன்னி மரியா அமல உற்பவி – பிறப்புநிலைப் பாவம் இல்லாமல் கருவுற்றவர் – என்னும் வழுவாநிலைக் கோட்பாடு, ‘இன்எஃபாஃபிலிஸ் தேயுஸ்’ என்னும் கொள்கைத் திரட்டின் வழியாக 1854-ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் நாளில் திருத்தந்தை 9-ஆம் பயஸ் அவர்களால் வழங்கப்பட்டது. கிறிஸ்து பிறப்புக்கான தயாரிப்பின் காலமான திருவருகைக்காலத்தில் இப்பெருவிழா கொண்டாடப்படுவது பொருத்தமாக இருக்கிறது. ஏனெனில், அன்னை கன்னி மரியாவின் அமல உற்பவம் கடவுள் மனுவுருவாதலுக்கான தொடக்கமாக இருக்கிறது.

கன்னி மரியின் அமல உற்பவம் பற்றிய குறிப்பு நேரடியாக திருவிவிலியத்தில் இல்லை. ஆனால், திருக்குரானில் ‘ஸூரா மர்யம்’ என்னும் அலகில் ‘மர்யம் பாவ அழுக்கின்றி பிறக்குமாறு கடவுள் அருள்கூர்ந்தார்’ என வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில், திருக்குரானைப் பொருத்தவரையில் இயேசு ஓர் இறைவாக்கினர். இறைவாக்கினர் பாவ அழுக்கின்றிப் பிறப்பவர் என்பதால், அவரைப் பெற்றெடுப்பவர் பாவ அழுக்கில்லாமல் இருக்கிறார் என்பது திருக்குரானின் புரிதல்.

‘பாவமற்ற நிலை, தூய்மை, சுத்தம், அழுக்கற்ற நிலை, அ-மலம்’ என்று இன்றைய நாளில் அன்னை கன்னி மரியாவின் தூய்மையை, புனிதத்தைப் போற்றுகிறோம். இந்தப் புரிதல் இன்றைய நாளுக்குப் பொருந்துமா?

‘தூய்மை என்பது கடவுள்தன்மைக்கு அடுத்த நிலை’ என்று சொல்லி வந்த நாள்கள் கடந்து, இப்போது ‘கறை நல்லது’ (cf. Surf Excel) என்று சொல்ல நாம் பழகிக்கொண்டோம். நாம் பயன்படுத்துகிற டெட்டால், லைசால் போன்றவை கூட 99.9 சதவிகதமே கிருமிகளைக் கொல்கின்றன. கறையோடு இருக்கிற தலைவர்களை நாம் ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொள்கிறோம். கறையோடு சமரசம் செய்துகொள்கிறோம். அன்னை கன்னி மரியா ‘கறையற்றவர்’ என்று சொல்வது சற்றே அவரை நம்மிடமிருந்து அந்நியப்படுத்துகிறது.

இரண்டாவதாக, ‘தூய்மை’ அல்லது ‘புனிதம்’ என்பதை எப்போதுமே மேன்மை என்று சொல்லிவிடவும் முடியாது. எடுத்துக்காட்டாக, சாலை ஓரத்தில் படுத்துறங்கும் வீடற்ற பெண்ணுக்கும், நாடோடிப் பெண்களுக்கும் அவர்களுடைய அழுக்குதான் அவர்களுக்குப் பாதுகாப்பு. தூய்மையாகவும் சுத்தமாகவும் அவர்கள் இருந்தால் அவர்களுடைய இருத்தலுக்கு அதுவே ஆபத்தாக முடியும். ஆக, ‘அழுக்கும் அழகே’ என்பதே இவர்களுக்கு ஏற்புடைய கருத்துருவாக இருக்கிறது.

ஆக, ‘அன்னை கன்னி மரியா தூய்மையானவர். நாமும் தூய்மையாக இருக்க வேண்டும்’ என்று நம் சிந்தனையைச் சுருக்கிவிட வேண்டாம். அவர்களுடைய தூய்மையின் நோக்கம், அது வழங்குகிற சவால் என்பதை முன்நிறுத்தி நாம் சிந்திப்போம்.

(அ) கன்னி மரியாவின் தூய்மை அவருடைய வாழ்வின் நோக்கத்தை வரையறுக்கிறது

‘சிலர் மேன்மையாகவே பிறக்கிறார்கள். சிலர்மேல் மேன்மை திணிக்கப்படுகிறது. சிலர் மேன்மையை அடைகிறார்கள்’ என்கிறார் ஷேக்ஸ்பியர். அன்னை கன்னி மரியா மேன்மையாகப் பிறக்கிறார். அதே வேளையில் தன்னுடைய சரணாகதி வாழ்க்கையால் மேன்மையை அடைகிறார். சதுரங்க விளையாட்டில் இந்தப் பக்கம் இருக்கிற ‘சிப்பாய்கள்’ பலகையின் அந்தப் பக்கம் சென்றுவிட்டார்கள் என்றால் அவர்கள் வலிமையானவர்களாக மாறுகிறார்கள். ஒவ்வொரு கட்டமாக அவர்கள் நகர்ந்தாலும் அவர்களுடைய விடாமுயற்சி அவர்களை வெற்றியாளர்களாக மாற்றுகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், ‘நாம் தூயோராகவும் மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்று முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார் … முன்குறித்து வைத்தார்’ என எழுதுகிறார் பவுல். நம் வாழ்க்கை என்பது வரலாற்று விபத்து அல்ல, மாறாக, அதற்கென ஒரு நோக்கத்தை கடவுள் வரையறுத்துள்ளார் என்பது பவுலின் புரிதலாக இருக்கிறது. அன்னை கன்னி மரியாவுடைய வாழ்க்கையின் நோக்கத்தை வானதூதர் வழியாக கடவுள் வெளிப்படுத்துகிறார் (நற்செய்தி வாசகம்). இதைப் போல, காண்கின்ற, கேட்கின்ற வகைகளில் கடவுள் தம் திருவுளத்தை நமக்கு வெளிப்படுத்துவதில்லை. அக, புற அறிகுறிகளைக் கொண்டே நாம் அதைக் கண்டுகொள்ள வேண்டும்.

நாம் அனைவரும் மேன்மைக்காகப் பிறந்துள்ளோம். மேன்மைக்காகவே கடவுள் நம் அனைவரையும் தேர்ந்தெடுத்து முன்குறித்து வைத்துள்ளார்.

(ஆ) நம் இருத்தல் அல்ல, மாறாக, நம் மாற்றமே நம் மதிப்பைக் கூட்டுகிறது

‘பெண்’ என்னும் நிலையில் இருந்த முதல் பெண், ‘தாய்’ (‘ஏவா’) என்னும் நிலைக்கு மாறுவதை இன்றைய முதல் வாசகம் நமக்குக் காட்டுகிறது. பெண்ணின் வித்துக்கும் பாம்பின் வித்துக்குமான பகையை இறையியலாக்கம் செய்து இயேசு கிறிஸ்துவுக்கும் தீமைக்கும் உள்ள பகை என்று நாம் புரிந்துகொள்கிறோம். விவிலிய நிகழ்வை அப்படியே எடுத்துக்கொண்டால், விலக்கப்பட்ட கனியை உண்கிற நிகழ்வு மானிட வாழ்வில் பெரிய மாற்றத்தை உருவாக்குகிறது. கண்கள் திறக்கப்பட்ட நிலைக்கு மானிடம் நுழைகிறது.

நாம் எப்படி இருக்கிறோம் என்பது அல்ல, மாறாக, நாம் எப்படி ஆகிறோம் அல்லது மாறுகிறோம் என்பதே முக்கியமானது. நாம் குழந்தையாக இருந்தபோது, ‘நீ என்ன ஆகப்போகிறாய்?’ என்று மற்றவர்கள் நம்மிடம் கேட்கிறார்கள். நாம் வளர்ந்தவுடன், ‘நீ என்னவாக இருக்கிறாய்’ என்று கேட்கிறார்கள். வளர்ந்தவுடன் ஒரு தேக்கநிலை வந்துவிடுகிறது. தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதே நமக்கு மதிப்பு தருகிறது. பால் தன் இருத்தல் நிலையை விடுத்து தயிர், பாலாடைக்கட்டி, வெண்ணெய், நெய் என மாறும்போதுதான் அதன் மதிப்பு கூடுகிறது. சாதாரண இரும்பு டங்ஸ்டன் இழையாக மாறும்போது அதன் மதிப்பு பல மடங்கு உயர்கிறது.

நாசரேத்தூர் இளம்பெண் என்னும் கன்னி மரியா கடவுளின் தாய் என மாறுகிறார். இந்த மாற்றத்துக்கு அடிப்படையாக இருப்பது அவருடைய அமல உற்பவம். ஆக, மாறிக்கொண்டே இருந்து நம் மதிப்பைக் கூட்ட இன்றைய நாள் நம்மை அழைக்கிறது.

(இ) கேள்வியிலிருந்து சரணாகதிக்கு

‘இது எப்படி நிகழும்?’ என்னும் கேள்வியிலிருந்து ‘கடவுளால் எல்லாம் நிகழும்’ என்னும் வாக்கியத்திற்குக் கடந்து செல்கிறது நற்செய்தி வாசகம். ‘கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை’ என்று வானதூதர் மொழியக் கேட்ட மரியா, ‘உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என்கிறார். ‘உம் சொற்படியே நான் நிகழ்த்துகிறேன்’ என்று தன்னை முதன்மைப்படுத்தாமல், கடவுள் தன் வாழ்வில் செயல்படுமாறு அனுமதிக்கிறார். பல நேரங்களில் வாழ்வின் நிகழ்வுகளை நாமே தலைமேல் எடுத்துக்கொண்டு நின்று கலக்கமும் கவலையும் அடைகிறோம். பல நேரங்களில் வாழ்வின் நிகழ்வுகள் நம் கைகளுக்குள் நிற்பதில்லை. நிகழ்வுகள் அதன்போக்கில் நடந்துகொண்டிருக்கின்றன. சற்றே நாம் தள்ளி நின்று இறைவன் செயலாற்றுமாறு அனுமதித்தல் நலம்.

கன்னி மரியாவின் தூய்மை கடவுள் அவருக்குக் கொடுத்த கொடை. அந்தக் கொடை செயலாற்றுமாறு அனுமதிக்கிறார் மரியா. ‘கடவுளால் எல்லாம் நிகழும்’ என்பது நம்முடைய நம்பிக்கை அறிக்கையாக இருக்கும்போது நாமும் நிபந்தனையின்றி சரணடைய முடியும்.

இன்றைய நாளில், அன்னை கன்னி மரியாவின் அமல உற்பவத்துக்காக கடவுளுக்கு நன்றிகூறுகிற வேளையில், தூய்மை என்பது அவருடைய தாய்மைக்கான தயார்நிலை என்பதை அறிந்துகொள்வோம்.

வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கான தயார்நிலையை நாம் பெற்றிருக்கவும், ஒவ்வொரு பொழுதும் மேன்மையை நோக்கி நகரவும், தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கவும், சரணாகதி மனநிலையுடன் வாழ்க்கையை வாழவும் முயற்சி செய்வோம்.

Thanks: அருள்திரு யேசு கருணாநிதி

Friday, December 5, 2025

திருவருகைக்காலம் முதல் வாரம் – சனி

பரிவு: மானுடம்மேல் படைத்தவன் கொள்ளும் பேரன்பு

எசாயா 30:19-21, 23-26. மத்தேயு 9:35-10:1, 6-8

சமீபத்தில் தீபாவளி வெளியீடாக வந்த 'பைசன்' என்ற தமிழ்த் திரைப்படத்தைப் பார்த்தேன். தென் தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து, ஜாதியச் சிக்கல்களிலும், கலவரங்களிலும் புதைந்து கிடந்த ஒரு இளைஞன், பல்வேறு அழுத்தங்களையும் அடக்குமுறைகளையும் தகர்த்தெறிந்து, ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பாக விளையாடும் கபடி வீரனாக உயர்கிறான்.

அதில் என்னை ஆழமாகத் தொட்ட ஒரு வரி— இரு முக்கியமான ஜாதித் தலைவர்கள் அடிக்கடி கூறும் வசனம்:

“ஒருத்தன் அடிமட்டத்திலிருந்து தன்னுடைய திறமையை நம்பி மேலே எழுந்து வர்ரானா … அவனை விட்டுடு!”

இந்தப் பண்பு தலைவர்களுக்கு மட்டுமன்று, அனைத்து மனிதர்களுக்கும் அவசியமான ஒன்று. —
இரக்கக்குணம்!


இறைவனுடைய பேரிரக்கம் - இந்தப் பெரும் பிரபஞ்சத்தையே படைத்து, தந்தைபோல் அன்புடன் வழிநடத்தும் இறைவன், தனது பேரிரக்கத்தின் உச்சத்தை, கிறிஸ்துவின் பிறப்பில் மனிதருக்கு வெளிப்படுத்துகிறார்.

இன்றைய முதல் வாசகத்தில், பாபிலோனிய சிறையில் துன்பப்படும் யூதர்களை நோக்கி இறைவாக்கினர் எசாயா, மெசியாவை “உங்கள் போதகர்” என்று அறிமுகப்படுத்துகிறார். இதுவரை “உங்கள் அரசர்,” “உங்கள் குரு,” “உங்கள் இறைவாக்கினர்” என்று கேட்ட மக்களுக்கு, “போதகர்” என்ற புதிய பெயர் அறிமுகப்படுத்தப்படுகிறது. 

இந்தப் போதகர்

* மனிதர்மீது பரிவு கொள்ளும் போதகர்,

* “இதுதான் வழி… இதில் நடந்துசெல்லுங்கள்!” என்று உண்மையை காட்டும் போதகர்.



இன்றைய நற்செய்தியில், இயேசு திரண்டிருந்த மக்களைப் பார்த்து பரிவு கொள்கிறார். அவரைக் கொல்லத் திட்டமிட்டவர்கள் கூட்டத்தில் இருந்தபோதும், அவர்கள்மீதும் compassionate heart உடன் பரிவு கொள்கிறார். 

ஆண்டவரின் குரல் நம் உள்ளத்தில் ஒலிப்பதுதான் நம் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆறுதல். இயேசு தம் சீடர்களுக்குச் சொற்களால் முன் கற்றுக்கொடுப்பதற்கு முன், தம் பரிவினால் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்.
ஏனெனில், கற்றுத்தருவதின் முதல் படி—பரந்துபட்ட பரிவுள்ளம்.

அனைவரையும் அன்பு செய்யும்
,கீழிருப்பவனை உயர்த்தும்,
அனைவரையும் மன்னிக்கும்

பேரிரக்கம் நமக்கும் அருளப்பட வேண்டி மன்றாடுவோம்!


Thursday, December 4, 2025

Friday of the 1st week of Advent

Isaiah 29:17–24 / Matthew 9:27–31

Jesus Gives the True and Meaningful Vision of Our Life

A few days ago, I received a heartbreaking phone call from a mother who had lost her 9-year-old daughter in an accident. The little girl was returning from school when a tragic incident occurred right near their home. She was the only child in the family. The mother called me as she was travelling back to her village with her daughter’s body. Her voice was filled with pain and darkness. She could not see any meaning or future in her life anymore. And I myself did not know how to console a mother whose whole world had collapsed in a moment. The human words are insufficient. For her, everything seemed lost. This sorrow will remain a deep wound in her heart until her death. 

Who can give her a new vision for life?

In today's first Reading: God Promises Vision to the Hopeless through the Prophet Isaiah. He spoke to a people who lost hope for their future. They are spiritually blind and discouraged. But God promises a new day: "The blind shall see, the lowly will rejoice and they shall receive understanding and wisdom" (Is 29:17–24)

This is more than physical healing—it is inner renewal, a promise that God can bring light even into the deepest darkness.

In the Gospel, two blind men cry out to Jesus for mercy. Their world was dark. No one could help them. Yet they believed that Jesus could. Jesus not only restores their physical sight but also awakens their spiritual vision, because they recognize Him through faith as the Messiah.

Their healing shows that faith can open what life has closed. There are moments in the life we feel like that of mother's pain—when death, tragedy, or evil suddenly blind us. Everything is dark. We cannot understand. We cannot see the future. At such moments, human words cannot fix our pain. But the presence of Jesus can slowly open a path where we see none.

Thank You Jesus! for the Word of God that God alone can give new vision to those who have lost all hope.

Through Jesus, we receive the vision of eternal life—a hope that suffering cannot erase.

May the Lord who opened the eyes of the blind open our hearts as well, so that even in moments of darkness, we may see His light, His way, and His promise of life. Amen!

Wednesday, December 3, 2025

Thursday of the First Week of Advent

Isa 26:1-6 / Mt 7:21.24-27

  • வேகமாக வளர்வதை விட வேரோட்டத்துடன் வளர்வது நீடிக்கும்.
  • அழகாய் வளர்வதை விட ஆரோக்கியமாய் வளர்வது நல்லது.

Today, people no longer seek modern and beautiful houses — they want strong houses. Natural disasters, such as typhoons, remind us that without a firm foundation, even the most modern buildings can collapse. Many invest so much, but are cheated by weak structures.

In the first reading, Isaiah speaks of Jerusalem, the strong city. Its strength does not come from its fine marbles, strong stones, or gigantic walls, but from the Lord who protects it. Its foundation is trust in God.

In the Gospel, Jesus gives us the image of the wise and foolish builders. The wise man builds his house on rock; the foolish builds on sand. What is this rock? It is a solid foundation — faith, formation, discipline, and commitment.


Life built on a solid rock...

A child who receives proper (strict) guidance from parents and teachers grows roots — grows strong. But a life without discipline becomes unstable and easily shaken.

This is true for every vocation:

  • Young men and women who follow Christ must be rooted in formation, family values, and missionary passion.
  • Students preparing for their future need training, hard work, and perseverance.

I recently watched Cristiano Ronaldo score a spectacular bicycle kick — even at 40, he remains extraordinary. That strength is the fruit of constant discipline. Greatness doesn’t happen overnight; it is built through years of formation.

Jesus expects the same from His disciples. Formation comes before mission. In the Church — and especially in our Guanellian Congregation — formation is our first mission.

Let us build a Church for the future: founded on faith, strengthened by prayer, made beautiful by love for God and the poor.

May our lives be houses built on the rock of Christ — strong, steady, and unshakable in every storm. Amen.

Popular Posts