Friday, December 5, 2025

திருவருகைக்காலம் முதல் வாரம் – சனி

பரிவு: மானுடம்மேல் படைத்தவன் கொள்ளும் பேரன்பு

எசாயா 30:19-21, 23-26. மத்தேயு 9:35-10:1, 6-8

சமீபத்தில் தீபாவளி வெளியீடாக வந்த 'பைசன்' என்ற தமிழ்த் திரைப்படத்தைப் பார்த்தேன். தென் தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து, ஜாதியச் சிக்கல்களிலும், கலவரங்களிலும் புதைந்து கிடந்த ஒரு இளைஞன், பல்வேறு அழுத்தங்களையும் அடக்குமுறைகளையும் தகர்த்தெறிந்து, ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பாக விளையாடும் கபடி வீரனாக உயர்கிறான்.

அதில் என்னை ஆழமாகத் தொட்ட ஒரு வரி— இரு முக்கியமான ஜாதித் தலைவர்கள் அடிக்கடி கூறும் வசனம்:

“ஒருத்தன் அடிமட்டத்திலிருந்து தன்னுடைய திறமையை நம்பி மேலே எழுந்து வர்ரானா … அவனை விட்டுடு!”

இந்தப் பண்பு தலைவர்களுக்கு மட்டுமன்று, அனைத்து மனிதர்களுக்கும் அவசியமான ஒன்று. —
இரக்கக்குணம்!


இறைவனுடைய பேரிரக்கம் - இந்தப் பெரும் பிரபஞ்சத்தையே படைத்து, தந்தைபோல் அன்புடன் வழிநடத்தும் இறைவன், தனது பேரிரக்கத்தின் உச்சத்தை, கிறிஸ்துவின் பிறப்பில் மனிதருக்கு வெளிப்படுத்துகிறார்.

இன்றைய முதல் வாசகத்தில், பாபிலோனிய சிறையில் துன்பப்படும் யூதர்களை நோக்கி இறைவாக்கினர் எசாயா, மெசியாவை “உங்கள் போதகர்” என்று அறிமுகப்படுத்துகிறார். இதுவரை “உங்கள் அரசர்,” “உங்கள் குரு,” “உங்கள் இறைவாக்கினர்” என்று கேட்ட மக்களுக்கு, “போதகர்” என்ற புதிய பெயர் அறிமுகப்படுத்தப்படுகிறது. 

இந்தப் போதகர்

* மனிதர்மீது பரிவு கொள்ளும் போதகர்,

* “இதுதான் வழி… இதில் நடந்துசெல்லுங்கள்!” என்று உண்மையை காட்டும் போதகர்.



இன்றைய நற்செய்தியில், இயேசு திரண்டிருந்த மக்களைப் பார்த்து பரிவு கொள்கிறார். அவரைக் கொல்லத் திட்டமிட்டவர்கள் கூட்டத்தில் இருந்தபோதும், அவர்கள்மீதும் compassionate heart உடன் பரிவு கொள்கிறார். 

ஆண்டவரின் குரல் நம் உள்ளத்தில் ஒலிப்பதுதான் நம் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆறுதல். இயேசு தம் சீடர்களுக்குச் சொற்களால் முன் கற்றுக்கொடுப்பதற்கு முன், தம் பரிவினால் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்.
ஏனெனில், கற்றுத்தருவதின் முதல் படி—பரந்துபட்ட பரிவுள்ளம்.

அனைவரையும் அன்பு செய்யும்
,கீழிருப்பவனை உயர்த்தும்,
அனைவரையும் மன்னிக்கும்

பேரிரக்கம் நமக்கும் அருளப்பட வேண்டி மன்றாடுவோம்!


No comments:

Post a Comment

Popular Posts