Monday, January 19, 2026

FIRST HOLY COMMUNION

நற்கருணை புதுமைகள் மற்ற அனைத்து புதுமைகளையும் விட (மரியா மற்றும் புனித அந்தோணியார்) பெயரிலே நிறைவேற்றும் புதுமைகளைவிட மேலானது. காரணம் இங்கே ஆண்டவர் இயேசுவின் நேரடியான பிரசன்னம் செயலாற்றுகிறது.

 2024 ஆம் ஆண்டு வெளிவந்த Miracles of Carlo Acutis  புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். எப்போது நற்கருணை புதுமைகள் நடக்கின்றன. குருவானவர் அல்லது ஆயர் ஆண்டவருடைய உடல் மீது ஐயப்பப்படும் போது அல்லது மக்கள் சில நேரம் ஐயப்படும் போது இந்த புதுமையும் நடக்கின்றன என்று கூறுகின்றனர். 

ஆனால் நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அனுதினமும், எப்பொழுதெல்லாம் திருப்பலி நடக்கின்றதோ அப்போது இந்தப் புதுமை நடக்கின்றது. நம் கண்களுக்கு புலப்படுவதில்லை ஆனால்  அப்பம் ஆண்டவருடைய உடலாகவும், ரசம் ஆண்டவருடைய ரத்தமாகும் மாறுகின்றது. 

நற்கருணை உட்கொள்ளும் போது உடல், உள்ள ஆன்ம தயாரிப்பு அவசியம்.

1. உடலை தயாரிக்க வேண்டும்: நன்கு குளித்துவிட்டு, பல் துலக்கி கைகளை சுத்தம் செய்து நற்கருணை வாங்க வேண்டும். நற்கருணை ஆராதனை போது முழந்தால் பணியிட்டு ஆராதனை செலுத்த வேண்டும். மது பிரியர் ஜோக், நாவில் வாங்குபவர்கள் நாவில் வாங்கலாம் அல்லது கைகளை எளிமையாக திறந்து வைக்கவும். இடது கையை மேலேயும், வலது கையை கீழேயும் வைத்து வாங்கவும். ஆமென் என்று சத்தமாக சொல்லவும். 

2. உள்ள தயாரிப்பும் அவசியம் காரணம் நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்துவிட்டு மேற்கொண்டு உட்கொள்ள வேண்டும். 

Dine in and Dine out அனுபவம். ஒரு ஓட்டலுக்குச் சென்றால் உள்ளே அமர்ந்து கொண்டு அனைவரும் பேசி நாம் உண்ணலாம் அல்லது பார்சல் வாங்கி வெளியே வந்து நமக்கு பிடித்தமான இடத்திலோ வீட்டிலோ அமர்ந்து வசதியாக உண்ணலாம் இதை இரண்டும் அவரவர் அனுபவத்திற்கு ஏற்றார் போல நற்கருணியை பெறுவதிலும் இந்த இரண்டு அனுபவமும் முக்கிய பங்கு வைக்கின்றன நற்கருணை உங்களை மாற்றுகிறது உங்கள் சமூகத்தையும் மாற்றுகிறது இயேசுவை உட்கொண்டவர் இன்னொரு ஏசுவாக செயல்பட வேண்டும்

No comments:

Post a Comment

Popular Posts