மறையுரை
குவாடலூபே அன்னை விழா - திருவருகைக்காலம் இரண்டாம் வாரம் – வெள்ளி
எசாயா 48:17-19. மத்தேயு 11:16-19
டிசம்பர் 12 ஆம் நாள் உலகம் முழுவதும் குவாடலூபே அன்னை திருவிழாவை கொண்டாடுகிரோம், அன்னை மரியா இல்ல பல இடங்களில் காட்சி கொடுத்திருக்கிறார். மெக்சிகோ நாட்டு குவாடலூபே அன்னயின சிறப்பம்சம் என்ன?
13ம் நூற்றாண்டில் மிக்சிகோ நாட்டின் மலைப்பகுதியில் வாழ்ந்த Juan Diego என்ற 13 வயது மலைவாழ் சிறுவனுக்கு சிறுவனுக்கு மரியா அற்புதமாக தோன்றினார்.
ஆயர் அவர்களும், மற்றவர்களும் நம்பிக்கைக்கான ஒரு அடையாளம் கேட்டபோது அடுத்த முறை மரியாள் காட்சி தந்த போது அவருடைய பாரம்பரிய உடையான (Tilma) மேலாடையில் ரோஜாக்களை சேகரித்து ஆயரின் அறையில் திறந்த போது அன்னையின் அற்புதத் திருவுருவம் அந்த ஆடையில் அச்சிடப்பட்டிருந்தது.
இதில் என்ன சிறப்பு என்றால் என்னவென்றால் குவாடலூபே அன்னையின் உருவமும், விவிலியத்தின் இறுதி நூலான திருவழிப்பாட்டு நூல் குறியீடுகளோடு பொருத்தமாக இருந்தது. திரு அவையின் இருபெரும் தூண்கள் அன்னையும் விவிலியமும்.
இது ஒரு இயற்கைக்கு மாற்றான அற்புதம் என்று அனைவரும் உணர்ந்தனர். இதனால் ஆயர் அங்கு ஆலயம் அமைத்தார். இன்று அது உலகில் கோடிக்கணக்கான யாத்திரிகர்கள் வரும் குவாடலூபே தாயின் திருத்தலம், மெக்ஸிகோ நகரத்தில் உள்ள Basilica of Our Lady of Guadalupe ஆகும்.
குவாடலூபே அன்னைக்கு அற்புத செபம்
அன்பும் அருளும் நிறைந்த குவாடலூபே அன்னை, எங்கள் தாயாகி, எங்கள் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்த்தும் கருணைச் செல்வியே, உமது பரிசுத்த திருவுருவத்தில் எங்களை உன்னதமான அன்பால் தழுவியருளும்.
உமது திருவிரல்களில் மலர்ந்த ரோஜாக்கள் போல, எங்கள் வாழ்விலும் அருள் மலர்ச்சி உண்டாகச் செய்யும்.
எங்கள் கவலைகளை அமைதியாக மாற்றி, எங்கள் காயங்களை ஆறுதலின் மணத்தால் ஆற்றுதலாக்கும் தாயே, எங்களை உமது திருத்தோழமையில் பாதுகாத்தருளும்.
அன்னை, நோயாளிகளுக்கு ஆற்றல், துயரப்படுவோருக்கு நிம்மதி, அதிர்ச்சியில் இருப்போருக்கு துணை, இருளில் நடப்போருக்கு வெளிச்சம் நீரே. எங்கள் குடும்பத்தைக் காக்கவும், எங்கள் மனங்களை வலிமைப்படுத்தவும், எங்கள் பாதைகளை உண்மையின் வழியிலே நடத்தவும்.
குவாடலூபே அன்னை, உமது அன்பு போர்வையில் எங்களைச் சூழவைத்து, தெய்வகுமாரனின் அருளைப் பரிந்துரைத்து, எங்கள் வேண்டுகோள்களை ஏற்று நிறைவேற்றும் தாயே, எங்களுக்காக விண்ணப்பம் செய்.
ஆமென்.

No comments:
Post a Comment