திருவருகைக்காலம் 3ஆம் வாரம்
மகிழ்ச்சி மெசியாவின் செயல்
திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றை ‘கௌதேத்தே சண்டே’ (‘மகிழ்ச்சி ஞாயிறு’) என அழைக்கின்றோம். இன்றைய திருப்பலியின் வருகைப் பல்லவியும், முதல் வாசகமும் ‘அகமகிழ்தல்’ என்னும் சொல்லுடன் தொடங்குகின்றன.
சிரிப்பு பற்றிய ஒரு குட்டி ஜோக்கிலிருந்து துவங்குகிறேன்:
- முகத்தில் சிரிப்பு இல்லாதவனைப் பார்த்து ஒருவர் கேட்டார்: “என்னப்பா, சிரிக்கவே இல்லையே?”
- அவன் சொன்னான்: “சார்… சிரிப்பு ஃப்ரீ தான், ஆனா காரணம் இல்லாம சிரிச்சா ஆளுங்க சந்தேகப்படுறாங்க!”
உங்களுக்கு சிரிப்பு தருவது எது? நீங்கள் எதனால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறீர்கள்?
- பிரியாணி சாப்பிடுவது
- ஃபுட்பால் விளையாடுவது
- வகுப்புகளுக்கு விடுமுறை விடுவது
மகிழ்ச்சி என்பது ஒரு ‘ரெலடிவ்’ (தனிநபர்சார் உணர்வு) எமோஷன். அதாவது, அது தனிநபர் சார்ந்தது. எல்லாருக்கும் பொதுவான மகிழ்ச்சி என்று ஒன்று கிடையாது.
நெக்ஸ்ட் கொஸ்டின்: மகிழ்ச்சி உள்ளிருந்து வருகிறதா? அல்லது வெளியிலிருந்து வருகிறதா? ‘உள்ளிருந்து வருகிறது’ என்றால், சில நேரங்களில் நம் மனம் எந்தக் காரணமும் இல்லாமல் சோர்ந்திருக்கக் காரணம் என்ன? மனதுக்கு உள்ளே இருந்து வருவது உன்னத மகிழ்ச்சியாக (Joy) மாறாக சற்று நேரமே நீடிப்பது சிற்றின்பம் (happiness) எனப்படும்.
அலெக்ஸாண்டர் தெ கிரேட் உலகையே தன் கைக்குள் அடக்கிவிடத் துணிந்தது இன்பதிற்காகவே! புத்தர் அரண்மனையை விட்டு வெளியேறி போதி மரத்தடியில் அமர்ந்தது நிறை மகிழ்ச்சிக்காகவே!
மெசியாவின் செயல்களைக் கேள்வியுறுவதும், ஏற்பதும், செய்வதும் அக மகிழ்ச்சி என்று முழுமகிழ்ச்சிக்கான புதிய வாயில்களைத் திறக்கின்றன இன்றைய வாசகங்கள்.
இன்றைய முதல் வாசகத்தின் (காண். எசா 35:1-6,10) பின்புலம் மிகவும் சோகமானது. கிமு 7-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இஸ்ரயேலும் எருசலேமும் அசீரியாவால் மிகுந்த அச்சுறுத்தலுக்கு ஆளாகின. மக்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள். கோயில் தீட்டாக்கப்பட்டது. ‘எல்லாம் முடிந்தது’ என்று நினைத்த மக்களுக்கு, ‘முடியவில்லை, விடிகிறது’ என்று இறைவாக்குரைக்கின்றார் எசாயா. முதலில், ஒட்டுமொத்த படைப்பும் புத்துணர்ச்சி பெறுகிறது – ‘பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழ்கிறது,’ ‘பொட்டல்நிலம் அக்களிக்கிறது,’ ‘லீலிபோல் பூத்துக்குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படைகிறது’ – படைத்தவரின் அரவணைப்பை படைப்பு பெற்றுக்கொள்கிறது.
பாடம் 1: Do not worry about the past, Be firm உள்ளத்தில் உறுதி
இஸ்ராயேல் மக்கள் கடந்த காலத்தின் அடிமைத் தனத்தில் நொந்து போய், திளைந்து போய் இருந்தவர்களிடம், "தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள். தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்’ என அழைப்பு விடுக்கின்றார் எசாயா. Do not worry about the past, do not waste your time by regretting the past life. மாறாக, Increase Gratitude. கிடைப்பதை வைத்து
மகிழுங்கள் அடிக்கடி உங்களை மற்றவர்களோடு கம்பேர் செய்யாதீர்கள். நீங்கள் கடவுளுடைய கொடை உறுதியாக கூறுங்கள். சின்ன சின்ன செயல்களுக்கு கூட நன்றி கடவுளுக்கு நன்றி கூறுங்கள் குறிப்பாக உணவுக்கு கிடைத்தகுடும்பத்திற்கு கிடைத்த நபர்களுக்கு மனிதர்களுக்கு நன்றி கூறி ஜெபியுங்கள்.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். யாக் 5:7-10) யாக்கோபின் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. யாக்கோபு இத்திருமடலை எழுதுகின்ற நேரத்தில் உலகின் முடிவு மற்றும் இரண்டாம் வருகையை மையமாகக் கொண்டு ‘நிறைவுகாலம்’ (‘பரூசியா’) பற்றிய எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. மக்கள் பொறுமையின்றி இருந்தனர். அதாவது, ஒரு வகையான அவசரம் அனைவரையும் பற்றிக்கொண்டது. எல்லாம் அழியப் போகிறது என்னும் அச்சம் அவர்களுக்கு இருந்தது. இவர்களுக்கு அறிவுறுத்துகின்ற யாக்கோபு, ‘பயிரிடுபவரைப் போல பொறுமையாகவும்,’ ‘ஒருவர் மற்றவரிடம் முறையீடு இன்றியும்’ இருக்குமாறு அறிவுறுத்துகின்றார்.
(ஆ) பாடம் 2 - பொறுமை: நம் வாழ்வில் நம்மை அறியாமல் ஏதோ ஓர் அவசரம் நம்மைப் பற்றிக்கொள்ள அனுமதிக்கிறோம். எதையாவது செய்துகொண்டே வேண்டும் என்ற நிர்பந்தமும் நம்மை அழுத்துகிறது. இந்த இடத்தில் யாக்கோபு தருகின்ற உருவகத்தின் பொருளை உணர்ந்துகொள்வோம். பயிரிடுபவர் கொண்டிருக்கும் பொறுமையை நாம் கொண்டிருக்க வேண்டும். நிலத்தில் விதைகளை இட்ட விவசாயி விதை தானாக வளரும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டும். Be calm, relate with every one. Experience the present life. அவசரம் குறைத்து பொறுமை ஏற்றால்தான் நம் வாழ்வில் மெசியாவின் செயல் நடந்தேறுதலைக் காண முடியும். நாமும் அச்செயலைச் செய்ய முடியும்.
நற்செய்தி வாசகம்: இயேசுவின் சமகாலத்தில் மெசியா பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மெசியா என்றால் அரசராக அல்லது அருள்பணியாளராக வந்து தங்களை எதிரிகளின் கைகளிலிருந்து விடுவிப்பார் என்று நம்பினர் மக்கள். இந்த நம்பிக்கை யோவானுக்கும் இருந்தது. ஆனால், இயேசுவின் மெசியா புரிதல் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. இயேசுவைப் பொருத்தவரையில் மெசியாவின் செயல்கள் என்பவை தனிநபர் வாழ்வில் நடந்தேறுபவை: ‘பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர், கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர், தொழுநோயாளர் நலமடைகின்றனர், காதுகேளாதோர் கேட்கின்றனர், இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது’ என்று மெசியாவின் வருகையின் மாற்று அடையாளங்களைச் சொல்லி அனுப்புகின்றார்.
பாடம் 3: நன்மை தரும் செயல்கள் செய்து அனுபவிக்க வேண்டும்: யோவானின் உடல் சிறைப்பட்டிருந்தாலும் அவருடைய உள்ளம் என்னவோ உறுதியோடு இருக்கிறது. தன்னைச் சுற்றி நடக்கும் நற்செயல்கள்: பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.
நண்பர்களே! நன்மை தரும் செயல்கள் அதிகம் செய்ய வேண்டும். Do at least one act of kindness daily. A kind word, a smile, and help at home for your family. மொபைல் உபயோகிப்பதாதை தவிர்ப்பீர். Put the phone down during meals. We lose a lot of time because of mobile phones. Look at each other. Listen. Happiness begins with attention. Even just one minute of prayer or silence each day can bring calm, unity, and inner strength to the family.
மூன்று வாசகங்களிலும் துன்பம் பின்புலமாக நிற்கிறது: (அ) முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் அசீரியாவின் அடிமைத்தனத்தில் இருக்கிறார்கள். (ஆ) இரண்டாம் வாசகத்தில், எதிர்காலம் பற்றிய அச்சம் யாக்கோபின் திருஅவைக்குத் துன்பம் தருகிறது. (இ) நற்செய்தி வாசகத்தில், அடிமைத்தனம், அச்சம், சிறையடைப்பு என்றும் மூன்று துன்ப நிலையில் இருந்தவர்களும் மெசியாவின் செயல்களைக் கேள்வியுறுகிறார்கள், காண்கிறார்கள், அனுபவிக்கிறார்கள்.
கடந்த காலத்தின் அடிமைத் தனத்தின் துவளாமல், இரண்டாம் வாசகம் காட்டும் பொறுமையோடும், நற்ச்செய்தி காட்டும் பிறரன்புப் பணிகளின் வழியாகவே மெசியாவின் செயல்கள் கண்டு கொள்ளப்ப்டும். மெசியாவின் செயல்கள் இஸ்ரயேல் மக்களுக்கும் இயேசுவின் சமகாலத்தவருக்கும் மட்டும் உரியவை அல்ல. அவை இன்றும் நம்மில் நம் வழியாக நடந்தேறுகின்றன. அவரின் செயல்கள் நம் வாழ்வில் சிற்றின்பகமன்று, மாறாக, நிறைமகிழ்ச்சி தருகின்றன.







