Sunday, January 18, 2026

கடவுளின் செம்மறி! - பொதுக்காலம் 2ஆம் ஞாயிறு

ஞாயிறு, 18 ஜனவரி ’26

எசாயா 49:3, 5-6. 1 கொரிந்தியர் 1:1-3. யோவான் 1:29-34

ரீசண்டா என்னோட பிரண்டோட சின்ன பொண்ணு சொன்ன விஷயம் எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது. அது கிளாஸ்ல சொன்ன அந்த முயல்-ஆமை ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டது. முயல் வேகமாக ஓடி பின்பு தூங்க ஆரம்பித்து விட்டது. ஆனால் ஆமையோ மெதுவாக, பொறுமையாக ஓடி முதல் பரிசைத் தட்டிச் சென்றது. வகுப்பில் இருந்து அனைத்து குழந்தைகளும் கைதட்டி ஆமையை ஆதரித்தனர். ஆனால் அந்த பாப்பா சொன்ன கேள்வி சொன்ன பதில்: பந்தயத்தில் இரண்டாவது வந்த முயலுமே சந்தோஷமா தானே இருந்திருக்கணும்! காரணம், அது ஓடிக்கொண்டிருந்த போது ஏதோ ஒரு மரத்தை பார்த்திருந்தால் மரத்தில் விளையாடி வந்திருக்கலாம். நண்பர்களோடு பேசி ஆடி பாடி மகிழ்ந்திருக்கலாம். ஆக பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்த முயலுமே மகிழ்ந்து தான் இருந்திருக்க வேண்டும். 

ஆம்! வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம் கிடையாது. அது நம்மை நாமே அறிந்து கொள்ளக்கூடிய பயணம். சிலர் வேகமாக - சிலர் மெதுவாக ஓடுவார்கள். அவரவர் உடல் தன்மைக்கு ஏற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப ஓடுவார்கள். ஆனால் இறுதியாக இறைவன் கேட்கும் கேள்வி: "நீங்கள் மகிழ்ச்சியாக பயணித்தீர்களா உங்களை ஏற்றுக் கொண்டு, அறிந்து கொண்டு பயணித்தீர்களா? இதையே இன்றைய வாசகங்கள் நமக்குக் கேள்வியாக விடுக்கின்றன. 

கிறிஸ்து பிறப்பு விழாவை தொடரும் மூன்று ஞாயிறுகளும் "வெளிப்பாடு ஞாயிறு" என அழைக்கப்படுகின்றன இயேசு புறவினத்தாரின் ஒளியாக தன்னையே வெளிப்படுத்திய விழாவை திருக்காட்சி திருவிழா என்றும், கடவுள் தன் மகனை இந்த உலகிற்கு அன்பார்ந்த மகன் என வெளிப்படுத்திய விழாவை திருமுழுக்கு ஞாயிறு என்றும், யோவான் மெசியாவை கடவுளின் ஆட்டுக்குட்டி என்று இந்த உலகிற்கு வெளிப்படுத்திய நாளை இன்றும் கொண்டாடுகின்றோம். 

இன்று மூன்று வாசகங்களும் நம்முடைய அழைப்பைப் பற்றி சிந்திக்க விடுகின்றன.  நீ அழைக்கப்பட்டவன் என எசாயா இறைவாக்கினரும், நீ தேர்ந்து கொள்ளப்பட்டவன் என பவுல் அடிகளாரும், நீ அனுப்பப்பட்டவன் என யோவான் நற்செய்தியாளரும் நம்மை அழைக்கின்றனர். ஆக வாழ்க்கை ஒரு பந்தயம் அல்ல! மாறாக பயணம். எந்த ஒரு விமர்சனமும் கூடாது! சிலர் தோற்றத்தை பார்த்து நம்மை விமர்சிப்பார்கள். ஆமையினுடைய ஓடுகளை பார்த்து, முயலின் திறமை பார்த்து விமர்சிப்பார்கள். ஆனால் ஆமை தன்னை புகழவில்லை, முயலை மட்டப்படுத்தவில்லை. தன்னை அறிந்து கொண்டது. ஆக திறமை மட்டும் போதாது அழைப்பை உணர்ந்த வாழ்க்கை வாழவேண்டும். 

இன்றைய நற்செய்தியில் மெசியாவுக்கென்று ஒரு உயரிய அழைத்தல் இருந்து. அதைப் போன்று மெசியாவின் முன்னோடிக்கு என்று ஒரு அழைத்தல் இருக்கின்றது. அழைத்தலை மற்றொரு அழைத்தலோடு ஒப்பிடக்கூடாது. Winning is not same for everyone. நான் மெசியா அல்ல! நான் முயலை போன்றவன் அல்ல. ஆனால் நான் அழைக்கப்பட்டவன், தெரிந்து கொள்ளப்பட்டவன், எனக்கென்று ஒரு பணி உள்ளது. 

யோவான் நற்செய்தியாளர் இயேசுவை ஆட்டுக்குட்டியென நமக்கு வெளிப்படுத்துகிறார் ‘செம்மறி’ அல்லது ‘ஆட்டுக்குட்டி’ என்னும் சொல்லை நாம் மூன்று நிலைகளில் புரிந்துகொள்ளலாம்:

(அ) பாஸ்கா ஆட்டுக்குட்டி – இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறுமுன் பாஸ்கா கொண்டாடுகிறார்கள். ஆட்டுக்குட்டியைப் பலியிட்டு அதன் இரத்தத்தால் தங்கள் வீட்டு நிலைகளில் குறியிடுகிறார்கள் (காண். விப 12). பாஸ்கா கொண்டாட்டம் அவர்களுடைய விடுதலையின் அடையாளமாக இருக்கிறது. ஆண்டவராகிய இயேசுவும் பாஸ்கா ஆடு போல பலியாகி நமக்கு பாவத்திலிருந்து விடுதலை தருகிறார். மேலும், எருசலேம் ஆலயத்தில் பாஸ்கா ஆடு பலியிடப்படும் நேரத்தில் இயேசு சிலுவையில் இறப்பதாகப் பதிவு செய்கிறார் நற்செய்தியாளர் யோவான்.

(ஆ) பாவக் கழுவாய் ஆடுகள் – இஸ்ரயேல் மக்கள் ஒவ்வோர் ஆண்டும் பாவக் கழுவாய் (எபிரேயத்தில் ‘யோம் கிப்பூர்’) நாளைக் கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டார்கள் (காண். லேவி 16). இந்த நாளில்தான் தலைமைக்குரு திருத்தூயகத்துக்குள் நுழைவார். அவர் தம் பாவத்துக்காக கன்றுக்குட்டி ஒன்றை ஒப்புக்கொடுப்பார். பின் இரண்டு செம்மறி ஆடுகள் அவர்முன்பாக கொண்டு வந்து நிறுத்தப்படும். அவற்றில் ஒன்றை மக்களின் பாவங்களுக்காகப் பலியிடுவார் குரு. மற்றொரு ஆடு ஊரின் நடுவே அனுப்பப்படும். அந்த ஆட்டின்மேல் மக்கள் தங்கள் பாவங்களைச் சுமத்துவார்கள். அதன் முடியைப் பிடுங்க, அடிக்க, அதன்மேல் எச்சில் உமிழ என்று அந்த ஆடு அனைத்து அவமானங்களையும் சுமந்துகொண்டு பாலைநிலத்திற்கு அனுப்பப்பட்டு அங்கே இறந்து போகும். இயேசு இவ்விரண்டு ஆடுகளையும் அடையாளப்படுத்துகிறார். மக்களின் பாவங்களுக்காகப் பலியாகிறார். சிலுவையைச் சுமந்துகொண்டு ஊருக்கு வெளியே செல்கிறார்.

(இ) நல்லாயன் – தம்மை ‘நல் ஆயன்’ என்று அடையாளப்படுத்துகிற இயேசு, ‘நல் ஆயன் தன் ஆடுகளுக்காக உயிரைக் கையளிக்கிறார்’ என்கிறார் (காண். யோவா 10:11).

‘உலகின் பாவத்தைப் போக்குபவர்’ என்று நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். ஆனால், திருப்பலியில், ‘உலகின் பாவங்களைப் போக்குபவர்’ என்று சொல்கிறோம். இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன? யோவான் நற்செய்தியில் ‘பாவம்’ என்பது ‘மானிட நிலை. கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள தூரம். அலகை செயல்படும் இடம்.’ இந்த நிலையிலிருந்து நம்மை விடுவிக்கிறார் இயேசு. ‘பாவங்கள்’ என்று சொல்லும்போது நம் தனிப்பட்ட பாவங்களை மன்னிக்கிறவராக, அவற்றை நீக்குபவராக இருக்கிறார் இயேசு. ‘பாவங்களிலிருந்து’ விடுபட அல்ல, ‘பாவத்திலிருந்து’ விடுபடவே நாம் முயற்சி செய்ய வேண்டும்.

Friday, January 9, 2026

The Baptism of the Lord


ஞாயிறு, 11 ஜனவரி 2026 / ஆண்டவரின் திருமுழுக்கு விழா

எசா 42:1-4, 6-7. திப 10:34-38. மத் 3:13-17

ஓர் அகலமான சாலை. சாலையின் இப்பக்கமிருந்து அப்பக்கம் கடந்து செல்ல வேண்டும். ஒரு தந்தையும் அவருடைய மகளும் சாலையின் இப்பக்கம் நின்றுகொண்டிருக்கிறார்கள். நிறைய வாகனங்கள் கடந்து செல்கின்றன. தன் கையை மகள் நோக்கி நீட்டுகிறார் தந்தை. மகள் தந்தையின் விரல்களை இறுகப் பிடித்துக்கொள்கிறாள். ஓர் அடி முன் ஓர் அடி பின், இப்பக்கம் அப்பக்கம் பார்வை என்று நகர்கிறார் தந்தை. குழந்தை தந்தையின் விரலை மட்டும் பிடித்து தந்தையுடன் நடக்கிறது. தந்தையைப் பொருத்தவரையில் சாலையைக் கடத்தல் என்பது பொறுப்பு. மகளைப் பொருத்தவரையில் அது ஒரு விளையாட்டு.

வாழ்க்கை என்ற சாலை கடத்தலில் – இப்பக்கமிருந்து அப்பக்கத்திற்கு – தந்தையைப் போல நம் கரம் பிடித்து வழிநடத்துகிறார் கடவுள். அவருக்கு இது பொறுப்பு. அவருடைய கரம் பிடித்திருக்கும் நமக்கு இது ஒரு விளையாட்டு.

இன்று ஆண்டவராகிய இயேசுவின் திருமுழுக்கு விழாவைக் கொண்டாடுகிறோம். 

இந்த நிகழ்வில் தாம் இறைமகன் (‘நீரே எம் அன்பார்ந்த மகன்’) என்று உலகுக்கு வெளிப்படுத்துகிறார். இந்த அனுபவம் இயேசுவுக்கும் ஓர் அடித்தள அனுபவமாக மாறுகிறது. தம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த அனுபவம் நோக்கி நகர்கிறார் இயேசு.

1. திருஅவையில் நம் பிறந்தநாள்:

உங்களுடைய பிறந்த நாள் என்று? பிறந்த நாளை எப்படி இப்படியெல்லாம் கொண்டாடுகிறீர்கள்? 

இனிப்புகள் வழங்கி, பார்ட்டிகள் வைத்து, நண்பர்களை அழைத்துக் கொண்டாடுகிறோம். திரு அவையில் நீங்கள் பிறந்த நாளை உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? இதுவும் ஒரு முக்கியமான நாள் திரு அவை நம்மை மகிழ்வோடு ஏற்றுக்கொண்ட நாள். கிறிஸ்தவனாக உங்களுடைய பிறப்பு இன்றிலிருந்து தான் தோன்றுகின்றது. நீங்கள் மரபு கிறிஸ்தவர்கள். கடவுள் திட்டம் கிறிஸ்தவனாக தொடங்குகிறது. ஆகவே திருஅவையின் பிறந்தநாளை நன்கு கொண்டாட வேண்டும். 

இயேசுவைப் பொருத்தவரையில் அவருடைய திருமுழுக்கு பணிவாழ்வின் தொடக்கமாக அமைகிறது. நம்மைப் பொருத்தவரையில் திருமுழுக்கு என்பது புதுப்பிறப்பின், பாவமன்னிப்பின் அடையாளமாக இருக்கிறது. திருமுழுக்கு நிகழ்வு வழியாக இயேசு தம்மை மானிடரோடு ஒன்றித்துக்கொள்கிறார். மானுடமும் இறைமையும் ஒரே நேரத்தில் இங்கே வெளிப்படுகிறது. திருமுழுக்கு யோவானின் கைகளிலிருந்து திருமுழுக்கு பெறும் அதே வேளையில் வானகத் தந்தையின் குரலும் கேட்கிறது. மூவொரு இறைவனின் வெளிப்பாடு இங்கே நிகழ்கிறது.

Do you remeber who are your godparents? In the Philippines, it is customary for godparents to sponsor the expenses of the baptized child and to support the child’s education. However, the Church reminds us that the deeper responsibility of godparents is to be guardians of the child’s Christian faith. Godparenthood is not merely a social role but a lifelong spiritual commitment, guiding the child not only through this life but toward eternal life.

2. ஜென்ம பாவத்தை சிதைக்கும் திருமுழுக்கு: 

Original sin is like a dusty window. Baptism is Jesus cleaning the window. God’s light can shine clearly again

Original sin is not a personal sin committed by the child. It is the condition into which all human beings are born because of the sin of Adam and Eve. We are born without God’s sanctifying grace. God forgives original sin completely through the Baptism. 

3. நாம் கடவுளின் தத்துப் பிள்ளைகள். 

இயேசுவே கடவுளின் சொந்த மகன். நாம் கடவுளின் பிள்ளைகளாகப் பிறப்பதில்லை, ஜென்ம பாவக் காரணத்தால். ஆனால் திருமுழுக்கின் வழியாக, இயேசு தனது 'Filiality' நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். அதனால்தான் நாம் கடவுளை நம்முடைய தந்தை என்று அழைக்கிறோம்.  "இவனேஅன்பார்ந்த மகன் என்று இயேசுவை அழைக்கும் கடவுள் - தந்தை, நம்மையும், இயேசுவை ஏற்றுக் கொள்வதன் வழியாக நம் ஒவ்வொருவரையும் "இவரே/இவளே அன்பார்ந்த மகன்/ள் என்று அழைக்கிறார். 

இறைவேண்டல் வழியாக, ‘நான் கடவுளின் மகன், மகள்’ என்று நாம் தெளிந்து தேர்ந்து நடக்க வேண்டும். அடிமை அல்லது பணியாளர் என்னும் நிலையில் அல்ல, மாறாக, பிள்ளைகள் என்னும் நிலையில் வாழும்போது நாம் கட்டின்மையோடும் மகிழ்ச்சியோடும் வாழ்கிறோம். நாம் எடுக்கும் தெரிவுகள் நன்றாக அமைகின்றன. நம் உள்ளார்ந்த இறுக்கம் தளர்கிறது. கிறிஸ்த வாழ்வு என்பது கடவுளின் மகனாக மகளாக அவருடைய கரம் பிடிப்பதற்கான அழைப்பு என்று கற்றுக்கொள்வோம். நம் கரம் பிடித்திருக்கும் கடவுளிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, வாழ்வை ஒரு விளையாட்டு போல எடுத்துக்கொண்டு மகிழ்வோம்.


January 7, Manila: Isaiah 55:1-11. Mark 1:7-11

Today we celebrate the baptism of our Lord. In liturgy, this day brings Christmastide to an end. On Christmas day, Jesus reveals himself to the Jews (the shepherds); on Epiphany day, he reveals himself to the Gentiles (the wise men from the East); and on the day of his baptism, he reveals himself to the entire humanity. The baptism of the Lord was also called as 'Theophany (‘God’s Revelation’). For it is here, for the first time, that we have the revelation of God the Trinity (Father as a voice from heaven, Son in human person, and Holy Spirit in the form of a dove).

(a) The River Jordan

Have you ever come across the river Jordan in the OT? Yes. In Joshua 3, Joshua is bringing the people of Israel to the promised land by crossing the river Jordan. The journey of liberation that began under the leadership of Moses concludes in the Jordan where Joshua led the people to the Promised Land. Thus, the river Jordan marks a new beginning in the lives of the people of Israel. Joshua (Jesus) of the New Testament, the originator of the New Israel, gets into the Jordan.

(b) Identity with humanity:

The baptism of John was for the forgiveness of sins and for conversion. Jesus’ going to the Jordan tells us his total identity with humanity. By being baptized, He exercised His full humanity. His mission is started as a man incarnated in our form, full identity with our humanity. Until now, he was with God, in divine form, but now he takes a different form, fully man. Entering the river Jordan, he starts from zero. 

(c) Baptism with the Holy Spirit

John the Baptist says that the one who comes after him will baptize with the Holy Spirit. At his baptism, the Holy Spirit descends on Jesus. From now on, the Holy Spirit leads him – to the desert to be tempted, and later to the ministry. The Risen Lord breathes on his disciples and gives them the Holy Spirit (cf. Jn 20:22). After his ascension, on the day of Pentecost, the Holy Spirit is poured on the apostles.

What is the lesson for us today?

Together with Jesus, we must enter the river Jordan. This becomes the starting point of our lives. Our baptism cleansed us from our sin; we are confirmed in faith through the Holy Spirit at confirmation. Let us be led by the Spirit. The Spirit makes us overcome our human frailty.

In the first reading, the Lord tells the people of Israel, “Come to the waters… why do you labor for that which does not satisfy?” Let our hearts be fixed on that which satisfies our inner spirit. In the faithfulness of God rests our faith.


Sunday, January 4, 2026

பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறுங்கள்

திங்கள், 5 ஜனவரி 2026

1 யோவா 3:22-4:6. மத் 4:12-17, 23-25 

வாழ்க்கையில் நாம் பாதுகாப்பாக இருக்க விரும்புகிறோம்; அதற்காகவே comfort zone–இல் தங்கிக்கொள்கிறோம். ஆனால் போர்க்களத்திற்குள் இறங்காமல், வெற்றியை அடைய முடியாது. ஆபத்துகளை ஏற்காமல், சவால்களை எதிர்கொள்ளாமல், வாழ்க்கையில் முன்னேற இயலாது.

இன்றைய நற்செய்தியில், முப்பது ஆண்டுகளாக மறைந்த வாழ்க்கை வாழ்ந்த இயேசு, நாசரேத்து என்னும் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறுகிறார். அவர் கப்பர்நாகும் சென்று அங்கே குடியிருக்கிறார்; அங்கே போதிக்கிறார்; அங்கேயே வல்ல செயல்களையும் செய்கிறார். அதே நேரத்தில், அங்கே எதிர்ப்பும் இருக்கிறது. ஆனால் அந்த எதிர்ப்புகள் இயேசுவை நிறுத்தவில்லை; மாறாக, அவரது பணியை இன்னும் வெளிப்படையாக மாற்றின.

2026 ஆம் ஆண்டு துவங்கி 1 வாரமே ஆகிறது. நாம் எடுத்தது மோடிவேசன், motivation alone cannot bring success. அது தீப்பொறி போல—ஒரு கணம் எரியும், பின்னர் மங்கும். நம்மை முன்னே கொண்டு செல்பவை, நம்முடைய தீர்மானம், தைரியம், தொடர்ச்சியான முயற்சி, திட்டமிடல் ஆகியவையே. 

அதற்கு முக்கியமான தடைகள் இரண்டு: ஒன்று நம் சோம்பல்; மற்றொன்று பிறரின் விமர்சனம். இவற்றிற்கு இடம் கொடுத்தால், நம் அழைப்பையும் நம் பணியையும் நாமே நிறுத்திவிடுவோம். இயேசு அதைப் போலச் செய்யவில்லை. அவர் சொன்னார்: “மனம் மாறுங்கள்; விண்ணரசு அண்மையில் வந்துள்ளது.” இந்த அழைப்பு முதலில் நமக்கே.

இன்றைய நற்செய்தி நமக்கு விடுக்கும் அழைப்பு இதுதான்: பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறுங்கள்; பயத்தை விடுங்கள்; விமர்சனங்களைப் பொருட்படுத்தாதீர்கள். கடவுள் அழைக்கும் இடத்திற்குச் சென்று, அவர் கொடுத்த பணியை தைரியமாகச் செய்யுங்கள். அப்பொழுதே நம் வாழ்க்கையும் பிறருக்கு நற்செய்தியாக மாறும்.

Saturday, January 3, 2026

Feast of Epiphany - திருக்காட்சிப் பெருவிழா

ஞாயிறு, 4 ஜனவரி 2026

 எசாயா 60:1-6. எபேசியர் 3:2-3, 5-6. மத்தேயு 2:1-12

கதை: சிற்றூர் ஒன்றுக்கு இளைஞன் ஒருவன் வந்தான். ஊருக்கு வெளியிலிருந்த ஒரு மரத்தின்கீழ் அமர்ந்திருந்த அவனைப் பற்றி ஊரார் ஒவ்வொரு விதமாக ஊகித்தார்கள். அந்த இளைஞன் தன்னைப் பற்றி யாருக்கும் எதுவும் சொல்லவில்லை. ‘அவன் ஒரு ஞானி, பித்துப் பிடித்தவன்’ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாகச் சொன்னார்கள். ஒரு நாள் மாலையில் அந்த இளைஞனிடம் சிறுமி ஒருத்தி வருகிறாள். ‘உன் பையில் என்ன வைத்திருக்கிறாய்?’ என்று சிறுமி இளைஞனிடம் கேட்டாள். பழைய அந்தப் பையைத் திறந்த இளைஞன் அதிலிருந்த வைரக்கல்லை எடுத்து சிறுமியிடம் நீட்டினான். மாலை வெயில் பட்டு வைரம் மின்னியது. ‘இதை எனக்குத் தருவாயா?’ எனக் கேட்டாள் சிறுமி. ‘எடுத்துக்கொள்!’ என்று சொல்லி சிறுமியிடம் வைரக் கல்லைக் கொடுத்தான் இளைஞன். வைரக்கல்லின் பிரமாண்டம் கண்டு வியந்தாள் சிறுமி. மறுநாள் காலையில் துயில் எழுந்த இளைஞன் தன் அருகே அதே சிறுமி நிற்கக் கண்டான். ‘என்ன ஆயிற்று?’ என விசாரித்தான். தன் கையை விரித்து இளைஞனை நோக்கி நீட்டிய சிறுமி, ‘இந்தா உன் வைரம்!’ என்றாள். ஆச்சர்யத்துடன் இளைஞன், ‘உனக்கு இது வேண்டாமா?’ என்று கேட்டான். ‘இந்த வைரக் கல்லை அப்படியே எனக்குத் தரத் தூண்டிய உன் உள்ளத்தைத் தா!’ என்றாள் சிறுமி.

கீழ்த்திசையிலிருந்து வந்து தாங்கள் பெற்றிருந்த அறிவை, தாங்கள் கொண்டு வந்த பரிசுப் பொருள்களைத் தந்துவிட்டு வெறுங்கையராய் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பிய மூன்று ஞானியரை இன்று நாம் கொண்டாடுகிறோம். மாதா காட்சி தந்தார். அந்தோனியார் புதுமைகள் செய்தார். விநாயகர் சிலையில் பால் வந்தது என்றெல்லாம் கேள்விப்படுகிறோம். ஆனால் இன்று கடவுள் காட்சி தருகிறார். தன்னையே வெளிப்படுத்துகிறார். 

  • “பெத்லகேமில் மனிதருக்காக மனிதனாகப் பிறந்த கிறிஸ்துவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது கிறிஸ்துமஸ்.
  • அதே கிறிஸ்து, உலகின் அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கீழ்திசைஞானிகளுக்கு தன்னையே வெளிப்படுத்திய விழாவே திருக்காட்சி.”

மூன்றே மூன்று பாயின்ட்ஸ்...

1. தாழ்ச்சி இல்லையேல் காட்சி இல்லை: 

“கீழ்த்திசை ஞானிகள்” என்று சொல்லப்படும் இவர்கள்: கிழக்கு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் (wise men) வானியல், ஜோதிடம், இயற்கை அறிவியல், தத்துவம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் (Science, Astronomy, Philosophy) நட்சத்திரங்களின் இயக்கங்களை கவனித்தவர்கள். ஏழைகள் அல்ல! அரசர்களுக்கும் ஆலோசனை வழங்கும் அளவுக்கு உயர்ந்த நிலை கொண்டவர்கள். அனைத்தையும் விட்டுவிட்டு உண்மையைத் தேட புறப்பட்டவர்கள்.

“இது உலக வரலாற்றில் முக்கியமான பிறப்பு” என்று உணர்ந்தவர்கள்

  • அறிவியல் அவர்களை பயணிக்க வைத்தது;
  • விசுவாசம் அவர்களை மண்டியிட வைத்தது.

அதனால்: பயண ஆபத்துகள், தெரியாத நாடுகள், அரசியல் அச்சுறுத்தல்கள் (ஏரோது) இவை எல்லாவற்றையும் மீறி அவர்கள் கிளம்பினார்கள்.

  • அவர்கள் உயர வானத்தை பார்த்தார்கள்.  நட்சத்திரம் அவர்களை கீழ் நோக்கி பார்க்க வைத்தது.
  • அரண்மனைக்கு அல்ல! குடிசைக்கு அழைத்தது.
  • அங்கே: ஞானிகள்/அறிவாளிகள் மண்டியிட்டார்கள்

தாழ்ச்சி இல்லையேல் காட்சி இல்லை.  நாடாளும் அரசராக இருந்தாலும், எவரையும் வீழ்த்தும் வீரனாக இருந்தாலும், அறிவு புகழ் பெற்றிருந்தாலும், இறுதியில் அனைத்துலக அரசன் இயேசுவை நாடியே வர வேண்டும்


(2) தாராளமாய் தருவோம் காணிக்கை!  

தங்கம், தூபம், வெள்ளைப்போளம் – அவை பொருள்களின் மதிப்பைக் காட்டுவதில்லை;

தங்களைத் தாங்களே முழுமையாகக் கடவுளுக்குக் காணிக்கையாக அளித்ததை வெளிப்படுத்துகின்றன.

“மூன்று ஞானிகள் வெறுங்கை வீசி இல்லத்திற்குள் நுழையும் விருந்தாளிகள் அல்ல.

  • அவர்கள் காயினைப் போல மேலோட்டமான காணிக்கையை அல்ல,
  • ஆபேலைப் போல உள்ளத்தில் இருக்கையோடு தங்களுடைய காணிக்கைகளில் சிறந்தவற்றையே கடவுளுக்குத் தருகிறார்கள்.

அதே மனநிலையே, தன்னிடம் இருந்த ஒரே வாழ்வாதாரமாகிய இரண்டு செப்பு காசுகளையும் எந்தக் கணக்குமின்றி கடவுளுக்குக் கொடுத்த அந்த ஏழை கைம்பெண்ணிலும் (மாற்கு 12:41–44) காண்கிறோம்.

  • ஆபிரகாம் தன் ஒரே மகனை அர்ப்பணிக்கத் தயங்காதார்;
  • சகேயு தன் செல்வத்தை விடுத்து மனம் மாறினான்;

இவர்கள் அனைவரும் ‘என்னிடம் இருப்பதை’ அல்ல, ‘என்னையே’ கடவுளுக்குக் கொடுத்தவர்கள்.

அதனால்,

  • உண்மையான காணிக்கை என்பது பொருளின் அளவில் அல்ல;
  • உள்ளத்தின் ஆழத்தில் தான் அதன் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது.”

“கடவுள் தேடுவது நமது பொருள்களை அல்ல; இவர்கள் கொண்டு வந்த பொன்னும், தூபமும், வெள்ளைப் போளமும் அல்ல, மாறாக, இவர்களுடைய தற்கையளிப்பு இதயமே நம்மை அவர்கள் நோக்கி இழுக்கிறது.

3) வழிபடுவோம் அந்தக் குழந்தையை!

மத்தேயு 2:11 – “நெடுஞ்சான் கிடையாக விழுந்து வணங்கினார்கள்” மத்தேயு பயன்படுத்தும் கிரேக்கம் சொல்: Προσκυνέω (Proskyneō) - முழுமையாக தாழ்ந்து விழுதல்

மண்டியிட்டு அல்ல; முகம் தரையில் படுமாறு விழுதல்

முழு சரணாகதி (total surrender):  "மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய். நீ மண்ணுக்கே திரும்புவாய் என்று உணர்ந்து மண்ணையும் நம்முடைய நெற்றியும் இணைத்துக் கொள்வதுதான்!

இது சாதாரண மரியாதை அல்ல. இது ஆழ்ந்த, புனிதமான வழிபாடு.

புதிய ஏற்பாட்டில் இந்தச் சொல் பெரும்பாலும்: கடவுளை வழிபடும்போது பயன்படுத்தப்படுகிறது.

  • மத்தேயு 4:10 – “உன் கடவுளாகிய ஆண்டவரையே வணங்குவாய் (προσκυνήσεις)”
  • யோவான் 4:24 – “ஆவியிலும் உண்மையிலும் வணங்குவோர்”

மத்தேயு யூதர்களுக்காக எழுதினாலும், இங்கு முதல் முறையாக யூதரல்லாதவர்கள் குழந்தை இயேசுவுக்கு Προσκυνέω செய்கிறார்கள். இஸ்ராயேலுக்குள் மட்டுமே சுருக்கப்பட்டிருந்த தேவ வழிபாடு, இப்போது உலகமெங்கும் திறக்கப்படுகிறது.

தேவன் ஒரு குழந்தையில் மறைந்திருக்கிறார். இந்த ஞானிகள் நமக்கு என்ன சொல்லித் தருகிறார்கள்?

ஆம். கடவுளை எப்படி வணங்க வேண்டும் என்பதை அவர்கள் கற்றுத் தருகிறார்கள். அவர்கள்  பயணம் செய்தார்கள் (உடல்), விழுந்தார்கள் (உடல்), காணிக்கை தந்தார்கள் (உள்ளம்) முழு உள்ளத்தோடும், முழு ஆன்மாவோடும் வணங்க வேண்டும். 

கீழ் திசை ஞானிகள் நமக்குச் சொல்லும் பாடம்: “கடவுளை உண்மையில் வணங்க விரும்பினால்,

நாம் உயரமாக நிற்க முடியாது; தாழ்ந்து விழ வேண்டியதுதான்.”

திருக்காட்சி ஒரு பயணம்

நாம் அனைவருமே பயணிகள், திருப்பயணிகள். நகர்ந்துகொண்டே இருக்கும்போதுதான் நாம் வாழ்ந்துகொண்டே இருக்கிறோம். கீழ்த்திசை ஞானியர் தொடக்கமுதல் இறுதி வரை பயணிகளாகவே காட்டப்படுகிறார்கள். இவர்களுடைய பயணத்தின் இலக்கு மாறிக்கொண்டே இருக்கிறது – எருசலேம், ஏரோதுவின் அரண்மனை, பெத்லகேம், சொந்த ஊர். ஆனாலும் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. எந்தவொரு பாதுகாப்பு வளையத்தையும் வைத்துக்கொள்ளாமல் தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு பயணத்திலும் ஒவ்வொரு வழிகாட்டியைக் கைக்கொள்கிறார்கள்: விண்மீன், மறைநூல் அறிஞர்களின் செய்தி, கனவில் எச்சரிக்கை. வாழ்வின் அழைப்புகள் எப்போதும் எங்கிருந்தும் வரலாம் என்று நினைக்கிற அவர்கள், தங்களுக்கு வெளியே தங்களுக்கு உள்ளே என அனைத்தையும் பற்றிக் கருத்தாக இருக்கிறார்கள்.

இன்று நாம் மேற்கொள்கிற அனைத்துப் பயணங்களையும் எண்ணிப்பார்ப்போம். பயன் தராத பயணங்கள் எல்லாம் நேர விரயமே. இலக்குகள் இல்லாத பயணங்கள் எல்லாம் ஆற்றல் விரயமே.


January 7, 2025, Manila 

Feast of the Epiphany

The light that shone in the night of Christmas, illuminating the Bethlehem grotto—where Mary, Joseph, and the shepherds remained in silent adoration—now shines forth and is manifested to all nations. This universal manifestation is called Epiphany, a mystery of light, symbolized by the star that guided the Magi on their journey.

The word Epiphany comes from the Greek epiphaneia, meaning manifestation or appearance. The true source of this light, however, is not the star but Christ himself, the “sun that rises from on high” (cf. Lk 1:78).

Who are the Magi? Joke (I hope ). Did you know there were originally 6 Kings, not 3? Only three reached Bethlehem. The 4th went to the USA, the 5th to China, and the 6th to the Philippines. They were: BURGER KING, CHOWKING, and TAPA KING. * * * J

The Gospel tradition speaks of three Magi, regarded as wise men—Melchior, Gaspar, and Balthasar. They are traditionally understood as coming from different regions, cultures, and races, symbolizing the universality of salvation. They were not Jews, but Gentiles—most likely priests of an Eastern religion, possibly Zoroastrian star-readers, trained in astronomy, philosophy, and religious traditions.

Before setting out for Bethlehem, they were readers of the stars, but during their journey, they undertook a far deeper interior journey. Their long and risky pilgrimage—perhaps lasting months—symbolizes a movement from pagan belief to faith, from scientific observation to spiritual surrender, from curiosity to worship. They were seekers of truth, and their search found fulfillment in Christ.

1. Searching Jesus

The Magi were men with restless hearts. Though learned, respected, and financially secure, they were not satisfied with comfort or status. They desired something more—the ultimate truth. They wanted to know whether God truly exists, whether he is concerned about humanity, and how he can be encountered.

Their outward journey mirrored an inward pilgrimage of the heart. They were seekers after God, and their search transformed them:

scientists became spiritual persons; philosophers became people of faith.

Saint Augustine reminds us that prayer is nothing but the expression of our deepest longing—or restlessness—for God. True prayer detaches us from false securities and opens our hearts to God. Every believer, as a pilgrim of faith, is therefore called to be a person of prayer, living in constant interior communion with God.


2. Offering Jesus

The Magi did not come to Jesus with empty hands. They opened their treasure chests and offered gold, frankincense, and myrrh—costly gifts used in worship, royal ceremonies, healing, and burial.

These gifts carry deep symbolic meaning:

  • Gold honors Christ as King
  • Frankincense acknowledges his divinity
  • Myrrh points to his humanity, suffering, and death

More than the material value, their offerings expressed self-giving. Like Abel, not Cain; like the poor widow who offered her two copper coins, they gave not from abundance alone, but from faith and surrender. True worship always involves offering oneself to God.

3. Worshipping Jesus

Why did the Magi come to Bethlehem? Because they recognized in the Child the King and Messiah.

Matthew 2:11 marks the high point of the narrative: “They prostrated themselves and worshipped him.”

The Greek word used here is Προσκυνέω (Proskyneō)—a term denoting profound reverence, even falling face-down in worship. In Matthew’s Gospel, this word is used almost exclusively for Jesus, highlighting his divine identity. What the Magi offer is not mere respect, but true worship, appropriate to God alone.

Thus, Gentiles become the first to worship Christ, revealing the universal scope of salvation. Their prostration proclaims Jesus as the Son of David, the Son of God, and Emmanuel—God with us.

Becoming Stars for the World

Guided by the star, the Magi reached Christ, the true Light who enlightens everyone (cf. Jn 1:9). Having found him, they themselves became stars, shining in the firmament of history. As Saint Paul says, believers are called to “shine like stars in the world” (Phil 2:15).

Every Christian renewal is a journey guided by the star of faith. When we open our hearts to Christ, allow his grace to transform us, and bind ourselves to him anew, we too become wise men and women—guides for others on the path of life.


Popular Posts