2025 இல் ஒரு கொரியன் எமோஷனல் ட்ராமாவாக வெளிவந்த Mumu I hear you Papa.
படத்தின் கதை. ஹீரோ ஒரு ஏசி மெக்கானிக். மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய குடும்பத்தை வழி நடத்தி வருகிறார். இவருடைய வேலை, சம்பள குறைவு, இவற்றெல்லாம் காரணம் காட்டி இவர் விவாகரத்து செய்கிறார் மனைவி. இவர்களுக்கு பிறந்த பெண் குழந்தை தான் Mumu, என்னை கேட்டால் படத்தின் உடைய ஹீரோயின் கதாநாயகி.
அந்த பொண்ணுதான் சொல்லப்போனா அந்த கதையின் நாயகி. நம்ம கதாநாயகனுக்கு இந்த உலகமே தன்னுடைய பொண்ணுதான். இந்த பொண்ணுக்கு உலகமே தன்னுடைய அப்பாதான். இதுக்கு இன்னொரு முக்கியமான காரணம் நம்ம கதாநாயகனுக்கு காது கேட்காது. அதனால அவர் எதை கம்யூனிகேட் பண்ணனும் அப்படின்னு நினைச்சாலும் அதை சைகையிலயேதான் வந்து அவர் கம்யூனிகேட் பண்ணுவாரு. கதாநாயகனுக்கு தன்னுடைய மகள் ரொம்ப ரொம்ப முக்கியம். அவன் மேலதான் உயிரே வச்சிருக்கேன். நம்ம கதாநாயகனுடைய மனைவி திருப்பி வருகிறாள். "என் மகளை தயவு செஞ்சு என்கிட்டயே கொடுத்துருங்க" அப்படின்னு லீகலாக அப்ரோச் பண்ண போக இதுக்கப்புறம் இந்த கதையில என்னதான் நடந்தது இதுதான் இந்த படத்துடைய மொத்த கதையே.
இந்த படத்தை பட் நிச்சயமாக நீங்க பார்க்கும்போது உங்களுக்கு I am Sam (2001), Deiva Thirumagal (2013) கண்ணுக்குள்ள கன்பார்மா ஓடியே தீரும்.
இந்த படத்துடைய கதாநாயகனும் அட்டகாசமாக புல் ஆப் பண்ணி இருக்கிறார். அந்த குட்டி பொண்ணு நடிப்புதானா இல்ல உண்மையாவே அவருடைய சொந்த பொண்ணா அப்படிங்கிற அளவுக்கு எனக்கு ஒரு சந்தேகம். அந்த அளவுக்கு அட்டகாசமான ஒரு பெர்பார்மன்ஸ் செம்மையாக புல் ஆஃப் பண்ணிருந்தது அந்த பொண்ணு. குறிப்பாக ஒரு ஃப்ளூட் எடுத்து அந்த பொண்ணு காது கேட்காத தன்னுடைய அப்பாவுக்கு வாசிச்சு காமிக்கிற ஒரு சீன் ஒன்னு இருக்கு நீங்க பாருங்க, யாரு பார்த்தாலும் கண்கள் எல்லாம் குளமாயிடும் நமக்கு. அந்த மாதிரி ஒரு காட்சி. .
இந்த படம் ஏற்கனவே வந்து ரெண்டு பேருமே பெஸ்ட் ஆக்டருக்கு வாங்கிட்டாங்க. இவர் ஹீரோ பெஸ்ட் ஆக்டருக்கு வாங்கிட்டாரு. அந்த குட்டி பொண்ணு பெஸ்ட் ஆக்ட்ரஸ்க்கு வாங்கிருச்சு.
படத்துடைய பேக்ரவுண்ட் ஸ்கோரிங்கமே இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒரு ஒரு எமோஷனல் சீக்குவன்ஸையும் பேக்ரவுண்ட் ஸ்கோரிங்ல உங்க புல் ஆஃப் பண்ண விதமே வேற அட்டகாசமாக பண்ணிருந்தாங்க. டெக்னிக்கலி இந்த கதைக்கெல்லாம் என்ன தேவையோ அது உள்ள இருந்தது. இதை தாண்டி மாற்றுத் திறனாளிகள் அவர்களுடைய செய்தியை சொல்ல அவர்கள் படும் கஸ்டம் - குறிப்பா, வாய் பேச முடியாத, இவங்க படுற கஷ்டம்ல்லாம் எவ்வளவுங்கிறது இந்த படத்தை பாருங்க. நிச்சயமாக ஒரு நல்ல ஃபீல இந்த படம் கொடுக்கும். மாற்றுத் திறனாளிகளின் துன்பங்களை விஷுவலா பேசுன ஒரு படம்.
