Saturday, November 8, 2025

ஆலயம் கடவுளின் வீடு! எளியோரின் கூடு !

ஞாயிறு, 9 நவம்பர் ’25

ஆலயம் கடவுளின் வீடு! எளியோரின் கூடு !  

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழா; எசே 47:1-2, 8-9, 12. 1 கொரி 3:9-11, 16-17. யோ 2:13-22

லாதெரன் பேராலய நேர்ந்தலிப்பு விழா! ஒரு ஆலயத்திற்கு இவ்வளவு பெரிய விழாவா! ஆம்! இது ஒரு பசிலிக்கா, பேராலயம்! திருத்தந்தையர்கள் அனைவரும் பாரம்பரியமாக வசித்து வந்த ஆலயம். 

இவை எல்லாவற்றையும் விட ஆலயம் என்பது கிறிஸ்துவின் மேல் எழுப்பப்பட்ட ஒரு சமூகம்! புதிய ஜோராபூர் ஆலயம்! ஒவ்வொரு ஆலயமும் அதைச் சார்ந்த கிறிஸ்தவர்களின் நம்பிக்கை பிரதிபலிக்கிறது. ஆலயமணி , தேர்த்திருவிழா, சப்பரம், எங்க ஊரு கோயிலில் மானப்பிரச்சனை, 

இப்படிப்பட்ட பாரம்பரியம் கொண்ட, சாலமோன் அரசர் கட்டிய அந்த எருசலேம் தேவாலயத்தில் இயேசுவின் செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அன்பே உருவான இயேசு, இரக்கமே உருவான இயேசு, கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, கோவிலிலிருந்து துரத்தினார்;

ஒரு சாமானியனின் கோபம் "கோபம் மூக்குக்கு மேல வருகிறது" 

விவிலிய பின்னணி: எருசலேம் நகரத்தின் பாஷ்கா விழா, 19 வயது நிரம்பிய ஒவ்வொரு யூதனும் தங்களுடைய வாழ்வில் ஒரு முறையாவது கண்டிப்பாக எப்படி ஆவது எருசலேம் ஆலயத்திற்கு சென்றிருக்க வேண்டும். அப்படி செல்லும்போது இந்த காரியங்கல் செய்ய வேண்டும். 

1. அவர்கள் வரி கட்ட வேண்டும். கோவில் வரி கட்ட வேண்டும் இந்த கோவில் வரி மிக அதிகமான வரி காரணம். எருசலேமுக்கு அருகில் உள்ளவர்கள் அடிக்கடி செல்வார்கள், ஆனால் புரவினத்தார்கசல். என்றாவது ஒருவர்கள் அதிகமாக வரி கட்ட வேண்டும்.

2. காணிக்கை பலி செலுத்த வேண்டும். சந்தையில் ஆடு மாடுகள், புறாக்கள், பறவைகள் மற்றும் பலவிதமான மிருகங்கள் கடவுளுக்கு பலியிடுவதற்காக விலங்குகளை விற்க ஆரம்பித்தனர். ஏனெனில் பணக்காரர்கள் பெரிய விலங்குகளை வாங்குவார்கள். ஏழைகள் மாடப்புறாக்களை .

3. புரவினத்தாரின் நாணயங்கள் கோவிலில் நாணயங்களாக மாற்றப்பட்ட பின்னரே வரி கட்ட முடியும், ஆறில் ஒரு பகுதியை பெற்றுக் கொள்வர். ஏழைகள் அநியாய வட்டிக்கு நாணயம் செலுத்தினார்கள். இதன் காரணத்தினாலே  திருப்பதி வேளாங்கண்ணி இந்த திருத்தலங்களை விட அதிகமான பன்மடங்கு அதிகமான காணிக்கை எருசலேம்.


யேசுவின் கோபத்திற்கு இதுவே காரணம்!  இறைவனுக்கு முதலிடத்தை கொடுக்க மறந்த மக்கள்! கடவுளின் பெயரால் ஏழைகலுக்கு நடக்கும் சமூக அநீதி! கடவுளுக்கு பலியிட தொலைவிலிருந்து கோவிலுக்கு வருகின்றார். ஏழை மக்கள் துன்பப்படுகின்றார். Courtyard is the unique place for the gentiles, for the high-priests, Pharisees and other people have their own space in the Temple of Jerusalem. The unique place for the poor is being encroached for the business purpose.  அவர்கள் வழிபடும் இடங்களில் சந்தைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டன, எப்போதும் கூச்சல் இறைச்சல். 

இயேசுவின் உண்மையான கோபம் அவர் கடவுள் மீதும் ஏழைகள் மீதும் வைத்திருந்த எல்லையற்ற அன்பு வெளிப்படுத்தியது. 

1. ஆலயத்தில் கடவுளுக்கு முதலிடம்: "என்னுடைய இல்லத்தை கள்வர் குகையாக மாற்றaதீர்கல்". லூக் இiறவேண்டலின் வீடு! உடல் வழியாக, உல்லம் வழியாக வனக்கம் செய்ய வேண்டும். நறகருனை ஆராதனை.  ஆலயம் கடவுல் வசிக்கும் இடம், அவர் எஙகும் இருக்கிரார், ஆனால் கோவிலில் வசிக்கிறரர். 

நம்மை முன்னிறுத்துவதில் பயன் கிடையாது. மாராக, கடவுளுக்கே முன்னுரிமை! அதனாலே நற்கருநையே பேழை ஆலயத்தின் மையத்தில் வைத்திருக்கிறார்கள். காரணம் இயேசுவே-நற்கருநையே மையம், பல நேரங்களில் நாம் ஆலயங்களை நம் பல்வேறு சொந்த பணிக்கு உபயோகப்படுத்துகிரோம். எப்பொதும் இரைச்சல், ஆட்டம், பாட்டம்! Fashion show, திறமைகளை வெளிப்படுத்தும் மேடை அல்ல! மாறாக கடவுளுக்கு முதலிடம்! ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில், கடவுளின் கோவில் தூயது; (1 கொரி 3:17)

2. அமைதி சுத்தம், ஜெபம்: உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் ஆலயம். (கொரி 6:19) கடவுள் விரும்பியது காணிக்கவில்லை அல்ல மாறாக நொறுங்கொண்டு இதயத்தை. 

ஒவ்வொரு பங்கின் இலக்கு! மக்களை அவர்களுடைய ஆன்மாவை இறைவனிடத்தில் வந்து சேர்க்க வேண்டுமே! தவிர உள்ளத்தில் உணர உதவியாக இருக்க வேண்டும். பெயருக்காகவும், நம்முடைய விசுவாசமும், இறை பக்தியும் மற்றவர்களை கவர்ந்து அவர்களையும் இறைவனிடம் கொண்டு வந்து சேர்க்கும்.